இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை குணப்படுத்த......

இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை குணப்படுத்த...... 

சில குழந்தைகள் இரவில் தூக்கத்தில் சிறுநீர் கழித்து விடுவார்கள் . அவர்களுக்கு பேதி மருந்து தர குணமாகிவிடும்.

 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கே இது பொருந்தும். ஆனால் சில குழந்தைகள் 12,13 வயதான பின்பும் படுக்கையில் சிறுநீர் கழித்து விடுவார்கள். வயதுக்கு வந்த பெண்கள் இதனால் மிகவும் சிரமப்படுவார்கள். இவர்களை மிக எளிதாக குணப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

உலர் திராட்சை - 50 கிராம் 
மிளகு தூள் - 50 கிராம் 
சுத்தமான தேன் - 50 கிராம்
முதலில் உலர்  திராட்சையை கல்வத்திலிட்டு அரைத்துக் கொள்ளவும். கல்வம்  இல்லாதவர்கள் சுத்தமான கழுவிய அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ளவும். மெழுகு போல் அரைத்த பின்பு மிளகு தூளை போட்டு அரைக்கவும். நன்றாக அரைத்த பின்பு தேன் சேர்த்து கொள்ளவும். எடுத்து பத்திரப்படுத்தவும். 

உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு காலை, இரவு 5 கிராம் வீதம் சாப்பிட 3 நாட்களில் தூக்கத்தில் சிறுநீர் கழிவது குணமாகிவிடும். 

மீதம் உள்ளத்தையும் சாப்பிட்டு வர நிரந்தர குணமாகும். இதனை யார் வேண்டுமானாலும் சுலபத்தில் செய்து கொள்ளலாம். நன்றி