பாமாயிலில் சமையல் செய்வதால் ஏற்படும் நன்மை தீமைகள்

பாமாயிலில் சமையல் செய்வதால் ஏற்படும் நன்மை தீமைகள்

எந்தப் பழத்திலும் கிடைக்காத வைட்டமின்-E நிறைந்துள்ள tocotrienols என்ற ரசாயனம் இதில் இருக்கிறது. அதுவும், ரீஃபைண்டு செய்யப்படாத எண்ணெயில் மட்டுமே இந்த வைட்டமின் சத்து நிறைந்திருக்கும்.

கலப்படம்:

பாமாயில் கலப்படத்தை அதன் நிறத்தை வைத்தே கணித்து விடலாம். இதன் சிவப்பு நிறத்துக்குக் காரணம், இதில் இருக்கும் கரோட்டின். ஆனால், இதில் சில ரசாயனங்கள் சேர்த்து வெள்ளை பாமாயிலாக மாற்றும்போது, எண்ணெய் கலப்படமாகிறது.
இந்த ரீஃபைண்டு ஆயில், பிஸ்கட், கேக், பீநட் பட்டர், சிப்ஸ் போன்றவை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. இது, உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும்.
இதில் ஆன்ட்டி-மைக்ரோபியல் தன்மை (Anti-Microbial Substance) இருப்பதால், இதைக் காயங்களை ஆற்றும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.
 சமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று தான் பாமாயில். ஆனால், அதில் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கின்றது.
குறிப்பிட்ட அளவில் பாமாயிலை உபயோகிப்பது பெரிய பிரச்சினையை உருவாக்கப் போவதில்லை. ஆனால், யாரெல்லாம் இதனை உபயோகிக்கலாம், யாரெல்லாம் உபயோகிக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வது நல்லது.

இதயநோய் அபாயம்

பாமாயிலில் அதிகப்படியான கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால் இதய நோய்க்கான அபாயம் அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.

உங்களுக்கு இதய நோய் இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் இருந்திருந்தாலோ பாமாயில் உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள்.

பாமாயிலின் அதிகப்படியான கொழுப்பு உடல் எடையை அதிகரிக்கக்கூடும். ஆனால், தினமும் பாமாயிலை உட்கொள்ளும் போது அது உடலில் உள்ள கொழுப்பு செல்களை படிப்படியாக நீக்கும்.

வளர்சிதை மாற்ற நோய்கள்

பாமாயிலில் உள்ள அதிகமான நிறைவடைந்த கொழுப்பு வளர்ச்சிதை நோய்களை உண்டு பண்ணும்.

பாமாயிலை சமைக்கும் போது அது ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். ஆய்வு முடிவுகள் கூட, சமைத்த பாமாயில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கூறுகிறது. ஆனால், சமைக்காத பாமாயில் எந்த பிரச்சினையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.

பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் உங்கள் கண்களுக்கு பார்வைத்திறனை அதிகரிக்கச் செய்யலாம். கண்பார்வை மேம்படுத்துவதில் பீட்டா கரோட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஹார்மோன் பிரச்சினை உள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட பாமாயிலை பயன்படுத்துவது சிறந்தது.

பாமாயிலில் வைட்டமின் இ அதிகமாக உள்ளது. இது உடலுக்கு இளமை தோற்றத்தை தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பாமாயிலை தொடர்ச்சியாக சமைக்காமல் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள சுருக்கம் மற்ற தோல் பிரச்சினைகள் எல்லாவற்றையும் போக்கிவிடும்.