இதயத்தில் அடைப்பு இருந்தா இந்த கலவையை தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் எடுத்துக் கொள்ளுங்கள்...!!
இதயத்தில் அடைப்பு இருந்தா இந்த கலவையை தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் எடுத்துக் கொள்ளுங்கள்...!!
கொலஸ்டிரால் என்பது உடலின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படும் மெழுகு போன்ற கொழுப்பாகும். இந்த கொலஸ்டிரால் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இது சில ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் உணவுகளை ஜீரணிக்கும் பொருட்களை உருவாக்க தேவைப்படுகிறது. நமது உடலே தேவையான கொலஸ்டிராலை உருவாக்கும். இருப்பினும் விலங்கு உணவுகளான முட்டை, இறைச்சி, சீஸ் போன்றவற்றிலும் இந்த கொலஸ்டிரால் காணப்படுகிறது.
ஒருவரது உடலில் கொலஸ்டிரால் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது இரத்தத்தில் உள்ள மற்ற பொருட்களுடன் சேர்ந்து பிளாக்கை உருவாக்கும். ப்ளாக்குகள் இரத்தக் குழாய்களின் சுவர்களில் ஒட்டிக் கொள்ளும். இப்படி இதயத்திற்கு செல்லும் தமனிகளில் ப்ளேக்குகள் அதிகமாக படியும் போது, பெருந்தமனி தடிப்பு நோய் ஏற்படுகிறது. இந்த நோயானது இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, கரோனரி இதய நோய்க்கு வழிவகுக்கும்.
தற்போது நிறைய பேருக்கு இதயத்தில் அடைப்பு பிரச்சினையானது உள்ளது. இந்த பிரச்சினைக்கு அறுவை சிகிச்சைகளை பலர் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இரத்த குழாய்களில் அடைப்பை உண்டாக்கும் கொலஸ்ட்ராலால் ஆன ப்ளேக்குகளை ஒரு அற்புதமான நேச்சுரல் சிரப்பின் உதவியால் கரைக்க முடியும். ஆயுர்வேதத்தில் இரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பை போக்க இந்த சிரப் உட்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது இந்த ஆயுர்வேத சிரப்பை எப்படி தயாரிப்பது, எப்போது குடிக்க வேண்டும், யாரெல்லாம் குடிக்கலாம் என்பது குறித்து விரிவாக காண்போம்.
ஆயுர்வேத சிரப் தயாரிக்க தேவையான பொருட்கள் :
# இஞ்சி ஜூஸ் - 1 கப்
# பூண்டு விழுது - 1 கப்
# எலுமிச்சை சாறு - 1 கப்
# ஆப்பிள் சீடர் வினிகர் - 1 கப்
# தேன் - 3 கப்
குறிப்பு:
எந்த அளவு கப்பை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் ஒரே கப்பால் அனைத்தையும் அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பூண்டின் நன்மைகள் :
# இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
# அடைப்பை உண்டாக்கும் கொழுப்பு கட்டிகளை கரைக்கும்.
# கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
# இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
# சரும தொற்றுகளை சரிசெய்யும்.
# எடை இழப்பிற்கு உதவும்.
# சுவாச பிரச்சினைகளை சரிசெய்யும்
இஞ்சியின் நன்மைகள் :
# இதய நோய்களைத் தடுக்கும்.
# இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
# எடை இழப்பிற்கு உதவும்.
# ஆற்றலை அதிகரிக்கும்.
# சளி, இருமல் பிரச்சினைக்கு நிவாரணம் அளிக்கும்.
எலுமிச்சையின் நன்மைகள் :
# இதயத் துடிப்பை சீராக்கும்.
# இதயத்தின் செயல்பாட்டை சீராக்க உதவும்.
# எடையைக் குறைக்க உதவும்.
# நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* கொலஸ்டிராலைக் கரைக்க உதவும்.
ஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள் :
# உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றும்.
# இதில் உடலுக்கு வேண்டிய கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் நொதிகள் உள்ளன.
தேனின் நன்மைகள் :
# மருத்துவ குணம் கொண்ட தேன் கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
# பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும்.
# உடலுக்கு ஆற்றலை வழங்கும்.
# புற்றுநோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
ஆயுர்வேத சிரப்பின் செய்முறை :
# முதலில் இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, அதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்து, வடிகட்டி 1 கப் எடுத்துக் கொள்ள வேண்டும்.
# பின் எலுமிச்சைகளைப் பிழிந்து, ஒரு கப் அளவு எடுத்து, அதையும் வடிகட்டி, இஞ்சி சாற்றுடன் சேர்க்க வேண்டும்.
# அடுத்து பூண்டு பற்களின் தோலை நீக்கிவிட்டு, அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து, பேஸ்ட் செய்து, 1 கப் அளவில் எடுத்து, அதையும் இஞ்சி சாற்றுடன் சேர்க்க வேண்டும்.
# பின் அதில் 1 கப் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
# பின்பு ஒரு பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி மிதமான தீயில் வைத்து 30 நிமிடம் சுண்ட காய்ச்சி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
# சிரப் நன்கு குளிர்ந்ததும், அதில் 3 கப் தேனை சேர்த்து கலந்து, காற்றுப்புகாத ஒரு பாட்டிலில் ஊற்றி சேகரித்துக் கொள்ள வேண்டும். இப்போது ஆயுர்வேத சிரப் தயார்.
யார் யாரெல்லாம் குடிக்கலாம்?
# இதயத்தில் அடைப்பு மற்றும் இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்.
# அறுவை சிகிச்சை செய்ய விரும்பாதவர்கள் அல்லது செய்ய முடியாதவர்கள் இந்த சிரப்பை குடிக்கலாம்.
# மாரடைப்பு வந்தவர்கள் இதை உட்கொள்ளலாம்.
# மலச்சிக்கல், அல்சர் பிரச்சினையைக் கொண்டவர்கள் சாப்பிடலாம்.
# எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இதை உட்கொள்ளலாம்.
எப்போது சாப்பிட வேண்டும்?
இந்த ஆயுர்வேத சிரப்பை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இரவு தூங்கும் முன்னரும் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம்.
முக்கியமாக இந்த சிரப்பை 1-2 மாதங்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம். குறிப்பாக இதில் நீர் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பாழாகிவிடும்.