மஞ்சிஸ்டா என்னும் மஞ்சட்டி என்ற அற்புத ஆயுர்வேத மூலிகை...

மஞ்சிஸ்டா என்னும் மஞ்சட்டி என்ற அற்புத ஆயுர்வேத மூலிகை...

மஞ்சிஸ்டா என்பது உலர்ந்த தாவர வேர்களை கொண்ட பிரபலமான ஆயுர்வேத மூலிகை. இதன் மருத்துவ குணங்களுக்காக ஆயுர்வேதத்தில் பல சிகிச்சை பயன்பாடுகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. மேலும் இயற்கையான உணவு வண்ணம் மற்றும் சாயமாக பயன்படுத்தப்படுகிறது. இது மாத்திரை, எண்ணெய், பொடி வடிவில் கிடைக்கிறது. இதன் நன்மைகள் என்னென்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

மஞ்சிஸ்டா என்னும் மூலிகை :

ஆயுர்வேத மூலிகையான மஞ்சிஸ்டா Manjistha என்பது Rubia cordifolia என்ற அறிவியல் பெயர் கொண்ட ஒரு வகை பூக்கும் தாவரமாகும். பசுமையான தோற்றம் கொண்ட இந்த மூலிகை தடிமனான நீண்ட, உருளை, பட்டை சிவப்பு நிறத்தில் இருக்கும். நீண்ட மெல்லிய நாற்கர தண்டுகளில் முட்கள் அல்லது உரோமங்களற்றதாக இருக்கும். இதன் இலைகள் முட்டை வடிவில் இதய வடிவில் இருக்கும்.

பூக்கள் சிறியதாகவும் பச்சை கலந்த வெண்மையாகவும் கிளைகள் கொத்துகளாக இருக்கும். பழங்கள் பொதுவாக சிறிய கோள வடிவ விதைகளை உள்ளடக்கியிருக்கும். புதர் செடிகள், ஈரமான இலையுதிர் காடுகள், வனப்பகுதி புல் சரிவுகள், புல்வெளி அல்லது திறந்தவெளி, பாறைகள் நிறைந்த இடங்களில் பசுமையான காடுகளில் இவை வளரும். களிமண்ணில் இவை சிறப்பாக வளரும்.

மஞ்சிஸ்டாவில் என்ன இருக்கு?

மஞ்சிஸ்டா பல மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. உயிர்வேதியியல் கூறுகளான இதில் பைட்டோகெமிக்கல் கூறுகளால் செறிவூட்டப்பட்ட இதில் சக்திவாய்ந்த ஹெபடோப்ரோடெக்டிவ், ஆன்டி ஸ்ப்ளெனோமேகலி, ஆன்டி-ஹெபடோமேகலி, கோலாகோக், ஆன்டி பிரைடிக் போன்ற மிக முக்கியமான மூலிகைகள் உள்ளன.

இவை தான் உடலில் நச்சு நீக்குதல், காய்ச்சல், செரிமானம், அழற்சி எதிர்ப்பு, மூச்சுக்குழாய் நீக்குதல், வலி நிவாரணி, நுண்ணுயிர் பண்புகள் கொண்டுள்ளன. இவை உடலில் மஞ்சள் காமாலை கல்லீரல் நோய்த்தொற்றுகள், பரு, அரிக்கும் தோலழற்சி, தடிப்புத்தோல், அழற்சி மற்றும் லிட்டிலிகோ உள்ளிட்ட தோல் நிலைகள், அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், ஒவ்வாமை, ஆஸ்துமா, இரத்த தொற்று, முடக்குவாதம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.

சுவாச பிரச்சனைகளுக்கு மஞ்சிஸ்டா :

மஞ்சிஸ்டா சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, ஆன் டி பயாடிக் மற்றும் ஆஸ்துமா எதிர்ப்பு பண்புகள் உள்ளடக்கியவை. இது ஜலதோஷம், தொண்டைப்புண் இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இது முக்கியமானது. இது மார்பு மற்றும் நாசி துவாரங்களுக்குள் உள்ள ரியம் துகள்களை மெல்லியதாக்கி தளர்த்துகிறது. இதனால் சுவாசம் எளிதாகிறது. சளி மற்றும் ஆஸ்த்துமா போன்ற மூச்சுக்குழாய் நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க செய்கிறது.

எடை இழப்புக்கு மஞ்சிஸ்டா :

மஞ்சிஸ்டா வேரில் ஃப்ளவனாய்டுகள் மற்றும் பயோ ஆக்டிவ் கூறுகள் அதிகமாக உள்ளன. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டபட்ட மஞ்சிஸ்டா எடுக்கும் போது திடீர் பசியின்மை போக்கும். மேலும் அதிகப்படியான உணவை தடுக்கிறது. எடை இழப்பு மூலிகைகளில் இது எல்டிஎல் அளவை குறைத்து வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

அல்சரை தடுக்கும் மஞ்சிஸ்டா :

மஞ்சிஸ்டா வேரின் அழற்சி எதிர்ப்பு மற்றும் அல்சர் எதிர்ப்பு பண்புகள், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி, வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பல்வேறு வகையான புண்களுக்கு சிகிச்சையளிப்பதில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. புண்கள் மற்றும் காயங்கள் சுருக்குவதை மேம்படுத்துகிறது. திசு மீளுருவாக்கம் மற்றும் காயம் மூடுவதை எளிதாக்குகிறது.

பிசிஓடி அறிகுறிகளை மேம்படுத்துகிறது :

மஞ்சிஸ்டா ஹார்மோன் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும். இது மாதவிடாய்களை ஒழுங்குப்படுத்துவதிலும், அதிகப்படியான வயிற்று வலி, இரத்தப்போக்குக்கு சிகிச்சையளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது டிஸ்மெனோரியாவின் போது வலியை குறைக்கிறது. மாதவிடாய் உதிரபோக்கை எளிதாக்குகிறது.

மஞ்சிஸ்டா மூலிகை கலவை இரத்தத்தை சுத்தப்படுத்தி கருப்பையின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கிறது. இது வழக்கமான மாதவிடாய் நாட்களை உண்டாக்கும்.

ஜீரணத்தை எளிதாக்கும் மஞ்சிஸ்டா :

மஞ்சிஸ்டா வாயுவை எதிர்க்கும் பண்பு கொண்டவை. இது உணவுக்குழாயில் வாயு உருவாவதை குறைக்கிறது. இதனால் வாயு, வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிறு விரிவடைதல் போன்றவற்றை குறைக்கிறது. மூலிகையின் ஆன்டாசிட் பண்பு வயிற்றில் அதிகப்படியான அமிலங்கள் உருவாவதை தடுக்கிறது. இதனால் உடலில் ஊட்டச்சத்துக்கள் சிறப்பாக உறிஞ்சப்படுகிறது.

சிறுநீரக கோளாறுகளை தடுக்கும் மஞ்சிஸ்டா :

மஞ்சிஸ்டாவில் இருக்கும் ரூபெத்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் மற்றும் பிற சிறுநீரக கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மஞ்சிஸ்டாவில் இருக்கும் உயிர் செயலில் உள்ள கூறு கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் குவிப்பு மற்றும் படிவத்தை குறைக்கிறது. இது சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்க் குழாய்களில் கற்களை குறைந்த வலியுடன் வெளியேற்ற செய்கிறது.

இதய கோளாறுகளை தடுக்கும் மஞ்சிஸ்டா :

மஞ்சிஸ்டாவின் சக்தி வாய்ந்த கார்டியோ- டானிக் பண்புகள் இதய முரண்பாடுகளுக்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கால்சியம் தடுப்பானாக செயல்படுவதால் இது ஒழுங்கற்ற இதயத்தாளத்தை நிர்வகிக்கிறது.

இரத்த நாளங்களில் கொழுப்பு திரட்சியை தடுக்கிறது. பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு, இரத்த உறைவு போன்றவற்றின் அபாயத்தை குறைக்கிறது. உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது.

மஞ்சிஸ்டாவை எப்படி சேர்ப்பது?

மஞ்சிஸ்டா சூரணங்கள், கஷாயம்,பொடி, மாத்திரை, லேகியம், உலர்ந்த வேர் வடிவில் கிடைக்கும். இது கடுமையானவை. கசப்பான சுவை கொண்டவை, இதை தேனுடன் கலந்து பயன்படுத்தலாம்.

எடுத்துகொள்பவரது வயது, நோய், அதன் தீவிரம் பொறுத்து மஞ்சிஸ்டாவின் அளவு நபருக்கு நபர் மாறுபடலாம். அதனால் ஆயுர்வேத நிபுணரை அணுகி சரியான அளவு எடுத்துகொள்ள வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் கால் டீஸ்பூன் முதல் அரை டீஸ்பூன் வரை இந்த பொடியை கலந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை தேன் சேர்த்து மருத்துவ நிபுணரின் அறிவுரையுடன் குடிக்கவும்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும். யாராக இருந்தாலும் மருத்துவர் அறிவுரையின்றி எடுக்க கூடாது.