கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு சரியாக புதினா, கொத்துமல்லி...

கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு சரியாக புதினா, கொத்துமல்லி...

கல்லீரல் பாதிப்பு, கல்லீரலில் கொழுப்பு படிதல், கல்லீரல் வீக்கம் இவை எல்லாவற்றையும் சரி செய்யக்கூடிய ஒரு அற்புதமான மூலிகை பானத்தைப் பற்றி பார்ப்போம். இது மூன்று நாட்கள் மட்டும் குடித்தாலே போதுமானது. உங்களுடைய எல்லா கல்லீரல் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.

பொதுவாக நம் வெளிப்புறம் காட்டும் அக்கறையினை உட்புறம் உள்ள உறுப்புகளுக்கு காட்டுவதில்லை. நமது மூளை மற்றும் இதயம் நமக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல் தான் மற்ற உறுப்புகளும். அதில் ஒன்றுதான் கல்லீரல் இதை ஆங்கிலத்தில் Liver என்று கூறுவர்.

இது நமது உடலில் கொழுப்பு, சர்க்கரை, இரும்பு சத்து, என எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி சரியான முறையில் இயங்க வைக்கிறது. இத்தகைய கல்லீரல் பாதிக்கப்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உடம்பில் திட்டித் திட்டாக வெள்ளை தேமல் போன்று காணப்படும். சிறுநீர் மிகவும் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். கண்ணைச் சுற்றி கருவளையம் காணப்படும். இவையெல்லாம் கல்லீரல் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள்.

மேலும் எடை குறையும். எந்த வேலை செய்தாலும் சோர்வு ஏற்படும். பொதுவாக கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் நமக்கு ஆரம்பத்தில் தெரியாது. 75 சதவீதம் பாதிக்கப்பட்ட பின்பு தெரியும். இதை எவ்வாறு வீட்டில் எளிய முறையில் சரி செய்யலாம் என பார்ப்போம்.

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் சுத்தம் செய்த ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகளை போடவும். புதினா இலைகள் கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. கூடவே சிறிது கொத்தமல்லி தழைகளும் கூட போடலாம் இரண்டும் ஒரே மருத்துவ குணங்கள் கொண்டவை. அடுத்து இதில் ஒரு கற்பூரவள்ளி இலையை போடவும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

இவை எல்லாவற்றையும் சேர்த்ததும் அடுப்பில் வைத்து ஒரு பத்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். ஒரு பங்கு தண்ணீர் அரை பங்காக குறைக்க குறையும் வரையில் கொதிக்க விட்டு எடுக்கவும். இதை சிறிது நேரம் ஆறவிட்டு மிதமான சூட்டில் இருக்கும் பொழுது ஒரு டம்ளரில் வடிகட்டி கொண்டு அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு உடல் உள் உறுப்புகளை சுத்தம் செய்யும். இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு அல்லது ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொள்ளலாம்.

இதை காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திய உடன் மூன்று நாட்கள் குடிக்கவும். இதேபோல் மாதத்தில் இரண்டு முறை செய்யலாம். உணவில் புதினா கொத்தமல்லி இலைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவும். இதனால் நமது கல்லீரல் சுத்தமாகி மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கும்.