அமுக்கராகிழங்கு சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்...
அமுக்கராகிழங்கு சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்...
இரத்த சர்க்கரை அளவை குறைக்க நீங்கள் இயற்கையான வழியை தேடுகிறீர்களா? அப்படியெனில் ஆயுர்வேதம் உங்களுக்கு அஸ்வகந்தா என்ற அமுக்கிராவை பரிந்துரைக்கிறது. இது அதிக நன்மைகளை உள்ளடக்கிய மூலிகையும் கூட. இது சர்க்கரை நோய்க்கு எப்படி உதவுகிறது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
அஸ்வகந்தா அதிக நன்மைகளை உள்ளடக்கிய ஆயுர்வேத மருந்தாகும். அஸ்வகந்தாவால் நீரிழிவை குணப்படுத்த முடியாது. ஆனால் இவை உடலில் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. இது மனநிலை மற்றும் உடல்நிலை இரண்டிற்குமே நல்லது. கருத்தரிப்பு முதல் இரத்த அழுத்தம் வரை இது அருமருந்தாக 300 வருடங்களாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவை உயர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா எப்படி எடுப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.
அஸ்வகந்தா சர்க்கரை நோய்க்கு பலனளிக்குமா?
அஸ்வகந்தா சர்க்கரையை குணப்படுத்தாது. ஆனால் அதன் விளைவுகள் மற்றும் அறிகுறிகளை சமாளிப்பதற்கு நன்றாக உதவும். ஒரு ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் சரியான முறையில் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் இன்சுலின் சுரப்பை அதிகரித்து தசை செல்களில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் என்று கண்டறிந்தார்கள்.
மற்றொரு ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் அஸ்வகந்தா வேர் பொடியை எடுத்துக்கொண்ட சர்க்கரை நோய் கொண்ட மக்களுக்கு உயர் இரத்த சர்க்கரை மற்றும் மிக குறைந்த இரத்த சர்க்கரை அளவை சமாளிப்பதற்கு உதவியுள்ளது என்று கண்டறிந்தார்கள். இது குறித்த ஆய்வுகளின் படி சரியான முறையில் இதை பயன்படுத்தினால் பெரியவர்களுக்கு சீக்கிரமாக சர்க்கரை இரத்தத்தில் கலப்பதை தவிர்க்கும். அதேபோல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
சர்க்கரை நோயை நிர்வகிக்க அஸ்வகந்தாவும் உதவும் என்று நிரூபிக்க தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. உங்கள் உணவு முறையில் அஸ்வகந்தாவை சேர்ப்பதாக இருந்தால் எப்படி சேர்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
சர்க்கரை அளவு கட்டுப்பட அஸ்வகந்தா :
அஸ்வகந்தாவை பலவிதமான முறைகளில் உணவில் சேர்த்து வரலாம். அது சிகிச்சையளிக்கும் நிலையை பொறுத்து மாறுபடலாம்.
2020 ஆம் ஆண்டு ஆய்வின் படி எலிகளின் நம்பகமான ஆதாரத்தில் அஸ்வகந்தாவை தூள் வடிவில் வாய்வழியாக எடுப்பது நரம்பியல் கடத்த கோளாறுகள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல நிலைகளுக்கு நன்மை அளிக்கும் என்று தெரிவிக்கிறது. மேலும் இதை சரியான முறையில் பயன்படுத்தும் போது மூட்டு அழற்சி மற்றும் பிற வகையான வலி வீக்கங்களை குறைக்கும்.
டைப்2 நீரிழிவு நோயாளிகள் அஸ்வகந்தாவை வேர் மற்றும் இலை சாறு வடிவில் எடுத்துகொள்வது சிறந்த சிகிச்சை முறை என்று சொல்கிறது. அஸ்வகந்தா உடலில் இரத்த குளுக்கோஸை குறைக்கவும், சோடியம் மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டின்களின் சிறுநீர் செறிவுகளை அதிகரிக்கவும் செய்கிறது என்கிறது.
டயாபட்டீஸ் கட்டுக்கு வர அஸ்வகந்தா எப்படி எடுப்பது?
ஒரு டம்ளர் பால் மற்றும் அரை தம்ளர் தண்ணீர் கலந்து பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். அரை டீஸ்பூன் அஸ்வகந்தா வேர் பொடியை கலந்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். பாதாம் மற்றும் முந்திரி பருப்புகளை ஒன்றிரண்டு எடுத்து பொடித்து போட்டு குடிக்கலாம்.
அஸ்வகந்தா ஷாட்ஸ்:
இதை நீங்கள் ஷாட் போல கூட குடிக்கலாம். தினமும் நீங்கள் சாப்பிடும் உணவுமுறையில் இதை சேர்ப்பதற்கு முன் சரியான அளவுக்கு உங்கள் மருத்துவரிடம் கலந்து எடுப்பது நல்லது.
அஸ்வகந்தா டீ:
இந்த மூலிகையை நீங்கள் காலையில் டீ போல கூட குடிக்கலாம் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிக மிக நல்லது. மாலை நேரத்தில் தூங்குவதற்கு முன்பு டீ அல்லது பால் போல குடிப்பதால் நல்ல தூக்கம் வரும்.
எனர்ஜி பூஸ்டர் மிக்ஸ்:
மஞ்சள், அஸ்வகந்தா, நெல்லிக்காய் சூர்ணம், ஹிமாலயா உப்பு, சீந்தில் ஆகியவற்றை கலந்து தண்ணீர் கொஞ்சம் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்த பின் வடிகட்டி குடிக்கலாம்.
தொடர்ந்து எடுக்கும் போது சர்க்கரை அளவு குறைந்துவிட வாய்ப்புண்டு என்பதால் சீரான இடைவெளியில் சர்க்கரை பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
அஸ்வகந்தாவின் ஆரோக்கிய நன்மைகள் :
இரத்த சர்க்கரை அளவை மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். அஸ்வகந்தாவின் வேறு நன்மைகள்
நீரிழிவு எதிர்ப்பு
அழற்சி எதிர்ப்பு
புற்றுநோய்க்கு எதிர்ப்பு
பாக்டீரியா எதிர்ப்பு
மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன்
இரத்தசர்க்கரை அளவை குறைக்கும் திறன்
பெண்களுக்கு பாலியல் செயல்பாடுகளை மேம்படுத்தும்
கருவுறுதலை மேம்படுத்தும்
ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்ரான் அதிகரிக்கிறது
நினைவுத்திறனை அதிகரிக்கும்
இதய ஆரோக்கியத்திற்கு உதவும்
இத்தகைய மருத்துவ குணங்கள் வாய்ந்த அஸ்வகந்தாவை உணவு முறையில் சேர்த்து வரலாம்.
குறிப்பு :
டயாபட்டீஸ் இருப்பவர்கள் அஸ்வகந்தாவை இரத்த சர்க்கரை அளவு குறைய எடுப்பதாக இருந்தால் மருத்துவரின் அறிவுரையோடு எடுப்பது மட்டுமே பாதுகாப்பானது.