தயிர் மற்றும் கிஸ்மிஸ் பழம் சாப்பிட்டால் விந்து அணுக்களின் தரம் அதிகரிக்கும்... எப்படி, எப்பொழுது சாப்பிடுவது நல்லது?

தயிர் மற்றும் கிஸ்மிஸ் பழம் சாப்பிட்டால் விந்து அணுக்களின் தரம் அதிகரிக்கும்...  எப்படி, எப்பொழுது சாப்பிடுவது நல்லது?

இன்று உடல்நல பிரச்சினைகளை தினமும் ஏராளமானோர் சந்தித்து வருகிறார்கள். இதற்கு மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. ஆனால் அதே வேளையில் உடலில் சந்திக்கும் பிரச்சினைகளை சரிசெய்ய பல அற்புதமான உணவுகள் உதவுகின்றன. குறிப்பாக நாம் தினமும் சாப்பிடும் தயிர் பல ஆரோக்கிய பிரச்சினைகளைத் தடுக்கும். அதேப் போல் ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடும் ஒரு வகையான ஓர் உலர் பழம் தான் உலர் திராட்சை.

இந்த தயிரையும், உலர் திராட்சையையும் ஒன்றாக சாப்பிட்டால், உடலினுள் ஏராளமான அற்புதங்கள் நிகழும் என்பது தெரியுமா? ஆம், குறிப்பாக இந்த தயிரும், உலர் திராட்சையும் ஆண்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகின்றன. உங்களுக்கு தயிருடன் உலர்திராட்சையை சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தயிர் மற்றும் உலர் திராட்சை :

தயிர் மற்றும் உலர் திராட்சையில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இவை செரிமானத்தை மேம்படுத்துகின்றன. முக்கியமாக உலர் திராட்சையில் செரிமான மண்டலத்திற்கு நன்மை விளைவிக்கும் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த உலர் திராட்சையை தயிருடன் சேர்த்து சாப்பிடும் போது, இன்னும் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.

எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது?

தயிர் மற்றும் உலர் திராட்சையை காலை அல்லது மதிய வேளையில் தான் சாப்பிட வேண்டுமே தவிர இரவு நேரத்தில் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் பகல் வேளையில் உட்கொள்ளும் போது, அது செரிமான செயல்முறையை சீராக்கி, செரிமான பிரச்சினைகளைத் தடுக்கும். ஆனால் அதற்கு 4-5 உலர் திராட்சையை ஒரு சிறிய பௌல் தயிருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக உலர் திராட்சையை ஊற வைத்து உட்கொள்வது நல்லதல்ல.

உலர் திராட்சை மற்றும் தயிரை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் :

உலர் திராட்சை மற்றும் தயிரை ஒன்றாக உட்கொள்ளும் போது, அது பின்வரும் நன்மைகளை வழங்குகிறது. அவையாவன

* மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும்.

* செரிமானம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

* தயிருடன் உலர்திராட்சையை உட்கொள்ளும் போது உடல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி வலுவடையும்.

* உலர் திராட்சை மற்றும் தயிரை சாப்பிடும் போது இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

* எலும்பு பிரச்சினைகளைக் கொண்டவர்கள் தயிருடன் உலர் திராட்சையை சேர்த்து உண்ணும் போது எலும்புகள் வலுவடைந்து, எலும்பு பிரச்சினைகள் குறையும்.

* மாதவிடாய் கால வலியால் அவதிப்படும் பெண்கள் தயிருடன் உலர் திராட்சை சேர்த்து சாப்பிடும் போது, வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

உலர் திராட்சை மற்றும் தயிரை சாப்பிடுவதால் ஆண்கள் பெறும் நன்மைகள் :

தயிர் மற்றும் உலர் திராட்சை ஆகிய இரண்டுமே ஆண்களுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருட்களாகும். குறிப்பாக தயிர் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. ஆய்வுகளின் படி, ஆண்கள் தயிருடன் உலர்திராட்சையை சேர்த்து உட்கொள்ளும் போது, அது ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துவது தெரிய வந்துள்ளது. மேலும் இது ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகளையும் நீக்குகிறது. எனவே விந்தணு தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கும் ஆண்கள் தினமும் உலர் திராட்சையுடன், தயிரை சேர்த்து சாப்பிட நற்பலன்கள் கிடைக்கும்.