வாய் முதல் ஆசனவாய் வரை அனைத்து குடல் பிரச்சினைகளுக்கும் அற்புத தீர்வு

வாய் முதல் ஆசனவாய் வரை அனைத்து குடல் பிரச்சினைகளுக்கும் அற்புத தீர்வு

சாதிக்காய் - 100 கிராம்  
அதிவிடயம் - 100 கிராம்  
கற்கடகசிங்கி - 100 கிராம் 
நயம் இலவங்கப்பட்டை - 100 கிராம் 
சுக்கு - 100 கிராம் 
வால்மிளகு - 100 கிராம் 
மாசிக்காய் - 100 கிராம் 
இலவங்கம் - 100 கிராம் 
மிளகு - 100 கிராம் 
காட்டாத்தி பூ - 100 கிராம் 
குரோசாணி ஓமம் - 100 கிராம் 
கசகசா - 100 கிராம் 

மேலுள்ள மருந்துகளை முறைப்படி சுத்தி செய்துக் கொண்டு தனித்தனியாக நெய் விட்டு வறுத்து இடித்து பொடித்து சலித்து எடுத்து ஒன்றாக உறவு பட கலந்து புட்டியில் அடைக்கவும். 

அளவு : 1 கிராம் முதல் 2 கிராம் வரை 

அனுபானம் : மோர், நெய், தண்ணீர் 

பயன்கள் : கிராணி, அதிசாரம், IBS உஷ்ண பேதி, அனல் மந்தம், குன்மம் (Ulcer) ஆல் உண்டாகும் பேதி, வயிற்று பொருமல், செரிமான சக்தி குறைதல்... மேலும் பல நோய்கள் தீரும் .

கூடவே தயிர் சுண்டி சூரணம், சுண்டை வற்றல் சூரணம், படிகார பூங்காவி செந்தூரம், குங்கிலிய பற்பம், கத்தகாம்பு (வெள்ளை காசுகட்டி) போன்றவை சேர்த்து சாப்பிட உடனே பலனை தரும்.  

அதீத பேதியை ஒரு வேளை மருந்து நிறுத்தி விடும் அற்புத மருந்து.