செரிமான பிரச்சினைகள், வயிற்றுக் கடுப்பு, வயிற்றுக் கோளாறுகளுக்கு கருப்பு திராட்சைப்பழம்...

செரிமான பிரச்சினைகள், வயிற்றுக் கடுப்பு, வயிற்றுக் கோளாறுகளுக்கு கருப்பு திராட்சைப்பழம்...

கருப்பு திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படும் இதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

ஏராளமான நன்மைகள்

தினந்தோறும் சிறிதளவு கருப்பு திராட்சை சாப்பிட்டு வருவதன் விளைவாக நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய ஒர் பழமாகும். இதில் இருக்கக்கூடிய நன்மைகள் என்னவென்றால் வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய அல்சினிமா என்கின்ற நோய் குணமாக கருப்பு திராட்சையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உதவுகிறது.

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது

கருப்பு திராட்சை மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. நரம்பு செல்களில் உள்ள இயக்கத்தை கட்டுப்படுத்தி சீராக செயல்படுவதற்கு உதவுகிறது. கருப்பு திராட்சை தினமும் சாப்பிடுவதனால் பெண்களுக்கு மார்பக புற்று நோயை வராமல் தடுக்க உதவுகிறது.

இருதய புற்றுநோய் உறுப்புகளில் வரக்கூடிய மற்றும் இதர வகையான புற்று நோய்கள் வராமல் முற்றிலும் தடுக்க தினமும் நாம் கருப்பு திராட்சை சாப்பிட வேண்டும். செரிமான பிரச்சினை, வயிற்றுக் கடுப்பு, வயிற்றுக் கோளாறு ஆகிய பிரச்சினையினால் அவதிப்பட கூடியவர்கள் தினமும் கருப்பு திராட்சை சாப்பிடுவதனால் செரிமான கோளாறுகள் நீங்கி பாதுகாக்க உதவுகிறது.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலியினால் அவதிப்பட கூடியவர்கள் திராட்சை பழத்தை ஜூஸ் செய்து காலையில் குடித்து வருவதன் விளைவாக ஒற்றைத் தலைவலி குணமடைந்து விடும். கண்களுக்கு மிகவும் நல்லது. தினசரி சாப்பிட்டு வருவதன் காரணமாக ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்தி சீரான ரத்த ஓட்டத்தை அளிக்கிறது.

தினசரி நாம் அன்றாடம் வாழ்வில் கருப்பு திராட்சைகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். கருப்பு திராட்சையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலுக்கு பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது. பலவிதமான நன்மைகளை நம் உடலுக்கு தருகிறது.