விந்தணுக்களின் எண்ணிக்கையை கூட்டுவது எப்படி?

விந்தணுக்களின் எண்ணிக்கையை கூட்டுவது எப்படி?

அரசவிதை – 50 கிராம்
அதிமதுரம் – 50 கிராம்
ஓரிதழ் தாமரை – 50 கிராம்
துத்தி – 50 கிராம்
அம்மான் பச்சரிசி – 50 கிராம்

     ஆகியவற்றை எடுத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் ஜந்து கிராம் அளவு பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, 48 நாட்களில் விந்தணுக்கள் அபரிமிதமாய்ப் பெருகும்.

     விந்தில் உயிரணுக்கள் குறைவாகக் காணப்பட்டால், அரச விதையைத் தூள் செய்து பாலில் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வந்தால், விந்தில் உயிரணுக்கள் உண்டாகும்.
ஆரஞ்சு பழம் ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழம். ஏனெனில் அந்த பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுக்களானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஃபோலேட்  என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடலைப்பருப்பு 100 கிராம் வாங்கி நெய்யில் வறுத்துப் பொடிக்கவும். 100 கிராம் சர்க்கரையை 100 கிராம் பசும்பாலில் கலந்து அடுப்பிலேற்றி எரிக்கவும். பாகுபதம் வந்ததும் கடலை மாவையும், அத்துடன் 100 கிராம் சேர்த்து நன்றாகக் கிண்டி இறக்கிவிடவும்.

     தினசரி அதிகாலையில் 10 கிராம் அளவு சாப்பிட இளைத்த உடல் பருத்து, விந்து நஷ்டம் தீரும்.