தாமரை விதையின் மருத்துவ குணங்கள்

தாமரை விதையின் மருத்துவ குணங்கள்

முகத்தில் சீக்கிரம் சுருக்கம் வீழ, சீக்கிரமே வயதான தோற்றம் வர, மூட்டு வலி வர, நரம்பு இழுக்க, கை கால்கள் வலி எடுக்க, முடி உதிர்வு ஏற்பட, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் இப்படி பல வகையான பிரச்சினைகள் நம் உடம்புக்குள் வருவதற்கு, காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான். உடலுக்கு தேவையான கால்சியம் பாஸ்பரஸ் நார் சத்துக்கள் சரிவர கிடைக்காமல் இருப்பதன் மூலம், நம்முடைய உடலில் ஒவ்வொரு உறுப்புகளாக வலுவிழந்து, செயலிழக்க தொடங்கி விடுகின்றது. உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்க, உடல் உறுப்புகளை சரிவர செயல்பட வைக்க, ஒரு அற்புதமான குறிப்பைத் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மேல் சொன்ன அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கக் கூடிய சக்தி இந்த ஒரு பொருளுக்கு உண்டு. இது தாமரை விதையிலிருந்து எடுக்கக்கூடிய பொருள். வட மாநிலத்தவர்கள் இதை தங்களுடைய உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள். இது இப்போது நம்முடைய ஊர்களிலும் நாட்டு மருந்து கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் கிடைக்கின்றது. இதனுடைய பெயர் மக்கானா. நம்மில் நிறைய பேருக்கு இந்த பொருளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.

தினமும் ஒரு டம்ளர் பாலில் இந்த மக்கானாவை போட்டு குடித்து வந்தால் நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த மக்கானா பால் எப்படி தயார் செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

அடுப்பில் அகலமான ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1/2 ஸ்பூன் நெய் ஊற்றி, அதில் கசகசா – 1 ஸ்பூன், சேர்த்து கசகசாவை பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும் அதன் பின்பு இதில் 1 டம்ளர் அளவு பால் சேர்த்து காய வையுங்கள். பால் பொங்கி வரும்போது 15 மக்கானாவை இதில் போட்டு 5 நிமிடம் போல மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.

மக்கானா பாலில் போட்டவுடன் சுருங்கி சாஃப்ட் ஆக மாறிவிடும். இந்த பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து வெதுவெதுப்பாக ஆறவைத்து இதை ஒரு டம்ளரில் ஊற்றி, இனிப்பு சுவைக்காக தேன் கலந்து குடிக்கலாம். அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம். அல்லது கட்டி கட்டியாக இருக்கும் கற்கண்டை தூள் செய்து போட்டு குடிக்கலாம். அது நம்முடைய விருப்பம்தான். டைமண்ட் கற்கண்டுகளை பயன்படுத்த வேண்டாம். அது உடலுக்கு ஆரோக்கியம் தராது.

இந்தப் பாலை இரவு உணவு சாப்பிட்ட பின்பு 1 மணி நேரம் கழித்து குடித்து விட்டு, அதன் பின்பு ஒரு 10 நிமிடம் கழித்து தூங்க செல்ல வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த பாலை குடித்தால் அடுத்த நாள் உடல் சோர்வு இல்லாமல் வேலை செய்யலாம்.

தினசரி இந்த பாலைக் குடித்தாலும் சரி அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாரத்தில் மூன்று நாட்கள் என்ற கணக்கில் இந்த பாலைக் குடித்தாலும் சரி, நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் இருக்கும். 100 வயது ஆனாலும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் உடம்பில் எந்த ஒரு நோய் நொடி பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ இந்த மக்கானா பால் நமக்கு உதவியாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.