உடல் எடை குறைப்பதற்கு, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேங்காய்-பூ
உடல் எடை குறைப்பதற்கு, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேங்காய்-பூ
தற்பொழுது பல இடங்களிலும் தேங்காய் பூ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் பெரும்பாலானோர் அதனை வாங்கி உண்ணுவதில்லை.
அதற்கு மாறாக ஃபாஸ்ட் ஃபுட்டையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் இந்த ஒரு பூவில் எவ்வளவு மகத்துவம் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
தேங்காய் இளநீர் என அனைத்தும் நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் தேங்காய் பூவை சாப்பிடுவதால் பருவ காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் இந்த தேங்காய் பூ சாப்பிடுவதால் விரைவில் குணமாகும். மேலும் தேங்காய் பூவில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடையை குறைக்க பயன்படும். அதேபோல புற்றுநோயை உண்டாக்கும் ப்ரீ ரேட்டி கல்சை நம் உடலிலிருந்து வெளியேற்ற உதவும்.
தேங்காய் பூ சாப்பிடுவதால் இன்சுலின் அளவு தூண்டப்பட்டு ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கடத்தப்படும். மேலும் ஜீரணத்திற்கு மிகவும் இது உதவும். மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய் பூ சாப்பிடலாம்.
தேங்காய் பூவில் அதிக அளவு ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இதற்கு உள்ளது. மேலும் தேங்காய் பூவில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளதால் முகம் சுருக்கம் போன்றவை ஏற்படாது தடுக்கும்.
மேலும் சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் அதில் உள்ள குறைபாடுகளை நீக்க தேங்காய் பூ சாப்பிடலாம். அந்தத் தொற்றுகளை வெளியேற்றவும் தேங்காய் பூ உதவும். மன உளைச்சலில் உள்ளவர்கள் அதிக அளவு சோர்வாக காணப்படுவர். அவ்வாறு இருப்பவர்கள் தேங்காய் பூ சாப்பிடுவதால் புத்துணர்ச்சி பெற முடியும்.
தேங்காய் பூ உட்கொண்டால் வெள்ளைப்படுதல் முற்றிலும் நின்று போகும். அது மட்டும் இன்றி மாதவிடாய் அதிக நாட்கள் தொடர்ந்தால் அவர்களுக்கும் இந்த தேங்காய் பூ நல்ல மருந்தாக இருக்கும். தேங்காய் பூவும் உடல் சூட்டை குறைக்கும் தன்மை உடையது. மேலும் ஒரு சிலருக்கு மூக்கிலிருந்து அடிக்கடி ரத்தம் வெளியேறும். அதனை தடுக்க தேங்காய் பூ சாப்பிடலாம்.
இவ்வாறு மருத்துவ குணமிக்க தேங்காய் பூவை விட்டுவிட்டு, ஃபாஸ்ட் ஃபுட்டை விரும்புவதை தவிர்க்கலாம்.