இஞ்சி-யும் பூண்டும் இணைத்து சாப்பிடும் போது கிடைக்கும் அற்புத நன்மைகள்

இஞ்சி-யும் பூண்டும்  இணைத்து சாப்பிடும் போது கிடைக்கும் அற்புத நன்மைகள்

பொதுவாக காலங்காலமாக அன்றாட சமையல் முதல் பிரியாணி வரை ஒவ்வொரு உணவிற்கும் அதிக சுவையை சேர்க்க பயன்படும் ஒரு அற்புத பொருள் தான் இஞ்சி-பூண்டு விழுது.

பெரும்பாலான குடும்பங்கள் பல்வேறு உணவுகளில் இஞ்சி-பூண்டை சேர்த்து வருகிறார்கள்.

குறிப்பாக வீடுகளில் இயற்கையாக அரைக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பல உணவுகளின் சுவையை அதிகரிக்கிறது.

இது உங்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்

 அந்த வகையில் இரண்டையும் சேர்க்கும் போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.  

வயிற்றுப் போக்கைக் குறைக்கவும், மலச்சிக்கல் மற்றும் வீக்கத்தை போக்கவும், நச்சுகளை வெளியேற்றவும், உடல் சரியாக செயல்படவும் உதவுகிறது.

கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டில் நச்சுகளை அகற்ற உதவும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது  மற்றும் சரியான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது.  இது உங்கள் உடலை சூடாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.

தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டுவதற்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் விநியோகத்தை அதிகரிப்பதற்கும் உதவகின்றது. 

 உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களைத் தடுக்கவும் உதவும். 

புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றது.