குளிர்காலத்தில் ஒவ்வொருவரும் கண்டிப்பாக குடிக்க வேண்டிய பானம்...

குளிர்காலத்தில் ஒவ்வொருவரும் கண்டிப்பாக  குடிக்க வேண்டிய பானம்...

சோம்பு கஷாயம்: சோம்பு விதைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் காணப்படுகின்றன.  இது தேநீர், ஊறுகாய், இனிப்பு உணவுகள் போன்ற பல உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. சோம்பில் பல மருத்துவ குணங்கள் உள்ளது மற்றும் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும். அதன்படி குளிர்காலத்தில் இதன் கஷாயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனவே சோம்பு கஷாயம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இன்று நாம் தெரிந்து கொள்வோம்.

சோம்பு கஷாயத்தின் நன்மைகள் : 

செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது :

 சோம்பு கஷாயம் வாயு உருவாக்கம், வயிற்று வலி அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். இது போன்ற பல கூறுகள் சோம்பில் காணப்படுகின்றன, இது வயிற்று தசைகளை அமைதிப்படுத்துகிறது.

வாய் துர்நாற்றம் :

சோம்பு கஷாயம் வாய் துர்நாற்றத்தை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சோம்பின் கஷாயத்தை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டும் குடித்து வந்தால் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். அதேபோல சோம்பை தினமும் மெல்லுவதன் மூலமும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

சுவாச நோய்களை குணப்படுத்தும் :

குளிர்ந்த காலநிலையில் மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம், சுவாசக் குழாயில் வீக்கம் போன்ற சுவாசக் கோளாறுகள் இருந்தால், சோம்பு கஷாயத்தை உட்கொள்வது உங்களுக்கு நிவாரணம் தரும்.

சருமம் :

சோம்பு விதைகளில் தாமிரம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் காணப்படுகின்றன. இவை சருமம் தொடர்பான பல பிரச்சினைகளை நீக்க உதவுகிறது. குளிர்காலத்தில் சோம்பின் கஷாயத்தை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை குடித்து வந்தால் நிறைய சரும பிரச்சினைகள் குணமாகும்.