மலையாளத்து பெண்களின் மாசு மருவில்லாத அழகான சருமத்திற்கு காரணமான மஞ்சிஷ்டா

மலையாளத்து பெண்களின் மாசு மருவில்லாத அழகான சருமத்திற்கு காரணமான மஞ்சிஷ்டா

பொதுவாகவே அழகு என்றால் அது கேரளத்து பெண்கள் தான் என்று நாம் வழக்கத்தில் சொல்லுவது உண்டு. அவர்களுடைய சருமமும் அவ்வளவு அழகாக பளபளப்பாக இருக்கும். முடியும் அவ்வளவு அழகாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அழகை அவர்கள் பெறுவதற்கு காரணம், அவர்கள் நாட்டில் இருக்கக்கூடிய இயற்கை சூழல் என்று கூட சொல்லலாம். சுத்தமான தேங்காய் எண்ணெயிலேயே முழுமையான அழகு அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. அந்த தேங்காய் எண்ணெயை வைத்து தான் ஒரு சுலபமான அழகு குறிப்பை இன்று நாம் பார்க்க போகின்றோம்.

இந்த குறிப்புக்கு நான் பயன்படுத்த போகும் பொருள் மஞ்சிஷ்டா, தேங்காய் எண்ணெய் இந்த இரண்டு பொருட்கள் தான். நாட்டு மருந்து கடைகளில் மஞ்சிஷ்டா கிடைக்கும். இது ஒரு மரத்திலிருந்து எடுக்கப்படக்கூடிய பொருள் தான். சின்ன சின்ன குச்சிகள் போல கிடைக்கும். அதை பத்து ரூபாய்க்கு வாங்கிக் கொண்டால் கூட போதும். தேங்காய் எண்ணெய் சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெயாக இருக்கட்டும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 50ml அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, இந்த மஞ்சிஷ்டா குச்சிகளை ஒரு கைப்பிடி அளவு போட்டுக் கொள்ளுங்கள். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு இந்த எண்ணெயை 5 லிருந்து 7 நிமிடங்கள் நன்றாக காய்ச்சிக் கொள்ளுங்கள். அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எண்ணெய் நன்றாக ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் அப்படியே ஊற்றிக் கொள்ள வேண்டும். குச்சிகள் அந்த எண்ணெயிலேயே இருக்கட்டும். அப்போதுதான் அதில் இருக்கும் சத்து அந்த எண்ணெயில் ஊறி சூப்பரான ஒரு எண்ணெய் நமக்கு கிடைக்கும். பாட்டிலில் ஊற்றி வைத்திருக்கும் இந்த எண்ணெயை தினமும் நாம் பயன்படுத்தி வரலாம்.

முகத்திற்கு அந்த எண்ணெயை தொட்டு லேசாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். கை, கால் உடல் முழுவதும் இந்த எண்ணெயை தடவி லேசாக மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் கழித்து கடலை மாவு, பயத்த மாவு, நலுங்கு மாவு, அல்லது இயற்கையான குளியல் பொடி ஏதாவது போட்டு குளிப்பது சிறப்பு. முடியாதவர்கள் நீங்கள் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தியே தேய்த்து குளித்துக் கொள்ளலாம். உங்களுடைய சருமத்தில் இருக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் 15 நாட்களில் நல்ல ஒரு ரிசல்ட் கொடுக்கக்கூடிய ரெமிடி இது.

முகத்தில் கருந்திட்டுகள் இருக்கிறது. இதற்கு முன்னால் வெள்ளையாக இருந்தேன் ஆனால் இப்போது என்னுடைய சருமம் கருக்கத் தொடங்கி விட்டது. சருமம் ரொம்பவும் டிரை ஆக இருக்கிறது. அல்லது மாநிறமாக இருப்பவர்கள் நல்ல கலராக வேண்டும் என்பவர்கள் எல்லாம் இந்த குறிப்பை பயன்படுத்தி வரலாம். உங்களுடைய சருமத்தில் இருக்கும் வறட்சித் தன்மையானது முழுமையாக நீங்கி சருமத்தை புது பொலிவோடு மாற்றக்கூடிய சக்தி இதற்கு உண்டு. நிறைய ஆயுர்வேத அழகு சாதன பொருட்களை தயார் செய்யும் போது இந்த மஞ்சிஷ்டவை பயன்படுத்துகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் கூட இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். ஆண்கள் முதல் பெண்கள் வரை இந்த குடிப்பை தாராளமாக பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் உங்களுடைய சருமத்திற்கு செட்டாகாது என்றால் ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் இந்த இரண்டு எண்ணெயையும் சேர்த்து கலந்து அதில் மஞ்சிஷ்டா சேர்த்து சூடு செய்து அதை பாட்டிலில் ஊற்றி வைத்தும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல ரிசல்ட் கிடைக்கும். அழகான அழகை பெற இது ஒரு சுலபமான வழி.