கர்ப்பப்பையில கட்டிகள், நீர்க்கட்டிகளை கரைத்து வெளியேற்ற...

கர்ப்பப்பையில  கட்டிகள், நீர்க்கட்டிகளை  கரைத்து வெளியேற்ற...

பொதுவாக இன்றைய காலத்தில் பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினை தான் PCOD.

PCOD என்பது கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாக்கத்தை உண்டாக்குகிறது. இது கருவுறுதல் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதனால் பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய்,  வலிமிகுந்த மாதவிடாய் போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

இதனை தீர்க்க சில எளியமுறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் கருஞ்சீரக கஷாயம்.

இது PCOD பிரச்சினையை சரி செய்கின்றது. தற்போது அவை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். 

தேவையான பொருட்கள் :

கருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன்
காய்ந்த வேப்பிலை – 10

செய்முறை :

மூன்று பொருட்களையும் மிக்சியில் சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள்.

பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள்.

பின் அரைத்த பொடியினை சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். பின் அடுப்பில் இருந்து இறக்கி 2 மணிநேரம் நன்றாக ஆறவிடவும். பின் கஷாயத்தை வடிகட்டி கொள்ளுங்கள்.

கர்ப்பப்பை கட்டிகள் கரைய தினமும் காலை உணவு உண்டபிறகு 1 மணி நேரம் கழித்து இந்த கஷாயத்தை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அருந்தி வர வேண்டும்.

பயன்கள் :

இந்த கஷாயத்தை தொடர்ந்து அருந்தி வருவதினால், கருப்பை நீர் கட்டி கரைய ஆரம்பிக்கும், அதோடு மாதவிடாய் பிரச்சினைகள் சரியாகும்,  இதனால் கருத்தரிக்க அதிக வாய்ப்புகளும் உள்ளது.