வயிற்றில் வாயுத் தொல்லைக்கு பாலாசனம்

வயிற்றில் வாயுத் தொல்லைக்கு பாலாசனம்

இன்றைய கால கட்டத்தில் மக்கள் பலர் வாயுத் தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகளால் அதிகமாக அவஸ்தைப்பட்டு வருகின்றார்கள்.

பல்வேறு தீர்வுகள் இருந்தாலும், இயற்கையான வழியில் அதற்கு தீர்வு காண்பது ஒன்றே நன்மை தரும்.

அதிலும் வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு பாலாசனம் என்ற யோகசான முறை பெரிதும் உதவியாக இருக்கின்றது.

அந்தவகையில் இதனை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

செய்யும் முறை :

முதலில் குழந்தை படுத்திருப்பது போல மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு முழங்கால்களையும் வளைத்து, கால்களைத் தரையில் ஊன்றியபடியே முதுகுப் பகுதியில் பேலன்ஸ் செய்து படுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு முழங்கால்களையும் மார்புப் பகுதியை நோக்கி உயர்த்த வேண்டும். கைகளால் முழங்கால்களைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு நேரம் இந்த நிலையில் தாக்குப்பிடித்து அப்படியே இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருக்க வேண்டும். இப்படி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் செய்து வருவதன் மூலம் வாயுத்தொல்லை குறையும்.   

நன்மைகள் :

இந்த ஆசனத்தைச் செய்யும்போது வயிற்றுப் பகுதியில் தேங்கியிருக்கும் வாயுக்கள் வெளியேற்றப்பட்டு, வீங்கிய வயிறு தட்டையாக மாறும்.