கால் மதமதப்பு, கால் எரிச்சலை சரி செய்யும் வில்வம்!!

கால் மதமதப்பு, கால் எரிச்சலை சரி செய்யும்  வில்வம்!!

நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சினைகள் பெரும்பாலும் வயது முதிர்ந்தோருக்கு ஏற்படுகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கால் மதமதப்பு , கால் எரிச்சல் போன்றவைகள் ஏற்படுகிறது. அவை ஏற்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகளைத் தவிர மற்றவருக்கும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும். நரம்புகளில் ஏற்படக்கூடிய வீக்கத்தால் தான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. கை கால்களில் இருக்கக்கூடிய நுனி நரம்புகளில் ஏற்படக்கூடிய வீக்கங்கள் தான்.

மேலும் நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கு செல்லக்கூடிய இரத்தத்தின் நரம்புகளில் வீக்கம் ஏற்படும் நெருப்பில் கால் வைத்தது போல எரிச்சல் ஊசி குத்துவது போல வலி உணர்வு போன்றவைகள் உண்டாகும்.

அதற்காக அதிக அளவு ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மதுப்பழக்கம் இருப்பவர்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும். இதற்காக வில்வ இலையை நன்கு நிழலில் காய வைத்து அதனை பொடி செய்து கொள்ள வேண்டும்.

அதனை வெறும் வயிற்றில் அரை டம்ளர் நீரில் அந்த பொடியை கலந்து 48 நாட்கள் குடித்து வர காலில் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும். இரத்த ஓட்டம் சீராகும் நரம்பு மண்டலம் முழுமையாக ஆரோக்கியமடையும் மற்றும் நரம்பு செல்கள் அனைத்தும் புத்துணர்ச்சி பெறும்.