இயற்கை முகப் பொலிவிற்கு...

இயற்கை முகப் பொலிவிற்கு...

எல்லோருடைய முகமும் குழந்தை பருவத்தில் இருந்தது போல, இப்போது பெரியவர்கள் ஆன பிறகு இருப்பது கிடையாது. ஆனால் நாம் குழந்தையாக இருக்கும் பொழுது எப்படி இருந்தோம்? அப்படியே இப்போதும் இருந்தால் எப்படி இருக்கும்? என்கிற ஆசை எல்லோருக்கும் இருப்பது உண்டு. அந்த வகையில் நம்முடைய முகம் குழந்தை போல மெத்தென்று பஞ்சு போல இருக்க, இந்த ஒரு பொருளை எப்படி பயன்படுத்துவது? இன்ஸ்டன்ட் ஆக முகம் பளபளக்க நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத்தான் அழகு குறிப்பாக இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கன்னத்தை தொட்டு பார்த்தாலே ரொம்பவும் மிருதுவாக சிலருக்கு இருப்பது உண்டு ஆனால் எல்லோருக்கும் இது போன்ற மிருதுவான சருமம் இல்லாததற்கு காரணம், நம்முடைய சுற்றுச்சூழல் மற்றும் உணவு பழக்க வழக்கம் ஆகும். ஆனால் இதிலிருந்து எளிதாக நம்முடைய சருமத்தை மீண்டும் குழந்தை பருவத்துக்கே கொண்டு செல்ல ரொம்ப எளிதாக ஒரு வழிமுறை உண்டு. அதைத் தான் இனி பார்க்க இருக்கிறோம்.

முதலில் ஒரு சிறிய அளவிலான மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் மூன்று அல்லது நான்கு முந்திரி பருப்புகளை முழுதாக சேர்த்துக் கொள்ளுங்கள். முந்திரி பருப்புகள் இருந்தால் போதும் முன்பு போலவே நம்முடைய முகம் முத்து போல வெண்மையாக ஜொலிக்கும். இதனுடன் தேவையான அளவிற்கு சுத்தமான பன்னீர் சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பன்னீருக்கு பதிலாக வேறு எதையும் நீங்கள் சேர்க்கக்கூடாது.

இந்த முந்திரி பருப்பு, பன்னீர் பேஸ்ட் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்கு அப்ளை செய்து கொள்ள வேண்டும். திக்கான கெட்டியான பேஸ்ட் ஆக இருப்பது நல்லது. இதை நன்கு அப்ளை செய்த பின்பு 20 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை நன்கு ஊறவிட்டு விட வேண்டும். அதன் பிறகு மென்மையான காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து அதை வைத்து முகத்தை துடைத்து எடுத்து விடுங்கள்.

முகத்தை கழுவ வேண்டாம். இதே போல நீங்கள் வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உங்களுடைய முகமானது மேடு பள்ளங்கள் இல்லாமல் ஒரே சீராக குழந்தை போல மிருதுவாக மாறும். நீங்கள் திடீரென வெளியில் கிளம்பும் பொழுது அல்லது ஏதாவது ஒரு பங்க்ஷன், பார்ட்டிக்கு செல்லும் பொழுது உங்களுடைய முகம் க்ளோயிங்காக இருக்கவும் இந்த ஒரு பேக்கை நீங்கள் போட்டு பார்க்கலாம். முந்திரி பருப்பில் அதிக அளவில் காப்பர் மற்றும் விட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே இது நம்முடைய சருமத்தை இளமையாக தக்க வைத்துக் கொள்ள நமக்கு உதவி புரியும்.

மேலும் இதில் இருக்கக்கூடிய நுண்ணூட்டச் சத்துக்கள் உடலுக்கு பலத்தை கொடுக்கக் கூடியது. உடலுக்கு மட்டுமல்லாமல் இது சருமத்திற்கும் ஒரு பலத்தை கொடுத்து முதிர்விலிருந்து எளிமையாக பாதுகாத்து தக்க வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. எனவே இனி உங்களுடைய முதுமையை விரட்டி அடிக்க முந்திரிப்பருப்பை தவிர வேறு எதுவுமே தேவை இல்லை, அந்த அளவிற்கு எஃபெக்ட்டிவாக இருக்கும் இதை நீங்களும் உடனே ட்ரை பண்ணி பாருங்க.