ஒற்றைத் தலைவலி குணமாக...

ஒற்றைத் தலைவலி குணமாக...

இன்றைய தலைமுறையினர் கம்ப்யூட்டர்களை பார்த்து தலைவலி முதுகு வலி கால் வலி என அவதிப்படுகின்றனர்.
கம்ப்யூட்டர்களில் உள்ள வெளிச்சம் கண்களில் நரம்பை பாதித்து ஒற்றை தலைவலியை உண்டாக்கும். மேலும் மன அழுத்தம் காரணமாகவும் ஒற்றைத் தலைவலி வருகின்றது.

தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருட்களை சேர்த்து தடவி வரும் பொழுது ஒற்றை தலைவலி எல்லாம் பறந்து போகும் அந்த செயல்முறையை தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. தும்பை பூ சிறிதளவு
2. சுக்கு ஒரு துண்டு
3. ஓமம் ஒரு ஸ்பூன்
4. குழம்பு மஞ்சள் ஒரு துண்டு
5. காய்ந்த மிளகாய் மூன்று காம்புடன்
6. பூண்டு பல் மூன்று
7. புழுங்கல் அரிசி ஒரு ஸ்பூன்
8. தேங்காய் எண்ணெய் 100 மில்லி

செய்முறை:

1. முதலில் சட்டியை அடுப்பில் வைத்து 100 மில்லி தேங்காய் எண்ணெயை ஊற்றவும்.

2. எண்ணெய் காய்ந்ததும் சுக்கு ஒரு துண்டு மஞ்சள் ஒரு துண்டு ஆகியவற்றை முதலில் போட்டு வருக்கவும்.

3. அது பொரிந்த உடன் மேலே கூறியுள்ள அனைத்தையும் போட்டு வறுக்கவும்.

4. நுரை நன்கு அடங்கும் வரை காத்திருக்கவும்.

5. நுரை அடங்கி ஆறியதும் வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து கொள்ளவும்.

6. வாரம் இரு முறை தலையில் தேய்த்து நன்கு தடவி வரும் பொழுது ஒற்றைத் தலைவலி காணாமல் போகும்.