நீங்கள் சம்மணம் போட்டு உட்கார்ந்தது எப்போது?

 நீங்கள் சம்மணம் போட்டு உட்கார்ந்தது எப்போது?

இதுவரை இல்லை என்றால்  முதலில் தரையில் 15 நிமிடம் உட்காருங்கள் !!

இதுவரை அப்படி உட்கார்ந்ததே இல்லை என்பதால்  கால் முட்டிகள் இரண்டும் தரையில் படியாது !!

லேசாக கால் முட்டிகள் மேல் கையை வைத்து அமுக்கி ! உட்கார முயலுங்கள் !!

இப்படி உட்காருவதால் முதுகை வளைக்க முடியாது முதுகுத்தண்டு நேராகத்தான் இருக்கும் !!

இப்படி ஒரு ஜிம்னாஸ்டிக்ஸுக்கு பின் ! எழுந்தால்  முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போன்ற அத்தனை இனிய உணர்வு கிடைக்கும் !!

நாற்காலியில் உட்கார்வது சில பத்தாண்டுகளாக இருக்கும் வழக்கம்தான் !!

நாற்காலி, சோபாவில் அமர்வதன் தீமைகள்

இதனால் நம் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டிய அவசியமில்லை !!

நம் பின்புறத்தையும், தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது ! அதனால்  முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை !!

இதனால் முதுகுத்தண்டு பலவீனமாகி ! முதுகுவலி வருகிறது !!

மக்களும் முதுகுவலி ஸ்பெஷல் நாற்காலி என ஆயிரமாயிரமாக செலவு செய்து வாங்குகிறார்களே ஒழிய ? கீழே உட்காருவது கிடையாது !!

இது தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு குட்டிச்சுவற்றில் தலையை முட்டிக்கொள்வது போலத்தான் !!

இதனால் வலி வரும் விகிதம் குறையுமே தவிர ? நிற்கப்போவது கிடையாது !!

ஜெரென்டாலஜி ! எனப்படும் முதியவர்களை வைத்து ஆய்வு நடத்தும் மருத்துவர்களை கேட்டால் சொல்வார்கள் !!

ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் ! என துல்லியமாக தெரியவேண்டும் எனில் அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது ! கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல் ! தரையில் ! கையோ ! காலோ ! ஊன்றாமல் ? எழுந்திருக்க முடிந்தால் ? அவருக்கு ஆயுசு நூறு !!*

தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி ! அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ ? இருவரோ ? வந்து கையை பிடித்து எழுப்பி விழும் நிலையில் இருந்தால் ? உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம் !!

ஜெரென்டாலஜி துறை ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து ! எழ வைத்து ! ஆய்வு செய்தார்கள் !!*

கை ! முட்டி ! என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு !!

ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு ! இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு !!

இப்படி அவர்களின் உட்காரும் பிட்னஸை கணக்கிட்டு ! அதன்பின் அவர்களை ஆண்டுக்கணக்கில் அப்சர்வ் செய்ததில் ? தெரிந்த விஷயம் !!

பாயிண்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க ! அதிகரிக்க ! மரண ரிஸ்க் ஒவ்வொரு பாயிண்டுக்கும் 21% கூடுகிறது என்பதுதான் !!

கீழே சம்மணம் போட்டு உட்காருவது ? யோகாசனத்தில் சுகாசனம் என அழைக்கப்படுகிறது !!

இந்தியா ! சீனா ! ஜப்பான் ! என கிழக்காசிய நாடுகள் எங்கிலும் ? சுகாசன முறையில் தான் மக்கள் உட்கார்ந்து எழுகிறார்கள் !!

செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கும் காரணம்? வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பதுதான் !!

கீழே உட்காருவது நாகரீகக் குறைவு என கருதி ? ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா ! சேர்களை ! வாங்கி முதுகுவலி ! மூட்டுவலியை ! விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம் !!

சோபா ! சேரில் ! நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால் ? முதலில் வருவது கால் மரத்து போன உணர்வு !!

அடுத்து பின்புறவலி ! காரணம் ? சோபாவில் உட்காருவதால் ? பின்புற தசைகளுக்கு வேலையே கிடையாது ! பின்புறம் இப்படி இனாக்டிவாக இருப்பது தான் ? முதுகுவலி ! மூட்டுவலி ! என அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள் !!

கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில் ? வயதானவர்கள் கீழே விழுந்து கையை ! காலை ! முறித்துக் கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்கின்றன ஆய்வுகள் !!* 

காரணம் ? அவர்கள் வாழ்வதே தரையில் தான் !!

கீழே படுத்து ! உட்கார்ந்து ! எழும் ! அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும் ! எலும்புகளும் ! அத்தனை வலுவாகி விடுகின்றன !!

 ஆனால் ? சோபா ! மெத்தையில் படுத்து ! பாதம் மட்டுமே தரையில் படும்படி வாழும் நாகரீக சமூக முதியவர்களுக்கு ? வயதான பின் இருக்கும் மிகப்பெரும் ரிஸ்க் ! கீழே விழுவதுதான் !!

ஆஸ்டியோ பெரோசிஸ் உள்ளிட்ட எலும்பு குறைபாடுகள் பலவும் உட்கார்வதால் வருகின்றன ! என சொல்லுகின்றன ஆய்வுகள் !!

சுகாசன முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து உண்பதும் ? புழங்குவதும் ? நம் ஆயுளை கூட்டி ! முதுகுத்தண்டு குறைபாடுகளை போக்கி ! பின்புறத்தையும் ! முதுகுத் தண்டையும் ! மூட்டையும் ! வலுவாக்குகின்றன !!

அதனால் ! இதுநாள் வரை கீழே உட்கார்ந்தது இல்லை ! எனில் ? இனி உட்கார்ந்து பழங்குங்கள் !!

அப்படி உட்கார்கையில் ? முட்டி அந்தரத்தில் தொங்குவது போல உயரமாக இருந்தால் ? அவ்வபோது கையை வைத்து மெதுவாக கீழே அமுக்கி விடுங்கள் !!*

*இது காலின் அடக்டர் (Adductor Muscle) தசைகளை பிளெக்சிபிள்(Flexible) ஆக்கி ! போஸ்ச்ரசை (Posture) சரி செய்யும் !!*

சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !!