30 நாள் குடித்தால் ஒரு மாதத்திலேயே 10 கிலோ உடல் எடை குறைக்கலாம்

30 நாள் குடித்தால் ஒரு மாதத்திலேயே 10 கிலோ உடல் எடை குறைக்கலாம்

இது எந்த மாயமோ மந்திரமோ கிடையாது. உண்மையிலேயே நம்முடைய வீட்டு சமையலறையில் இருக்கும்  சில இயற்கையான மருந்துப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த நீர் உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகளை மிக எளிமையாகக் கரைத்து விடுகிறது.
அப்படிப்பட்ட இந்த இயற்கை பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், எந்த அதிகப்படியான டயட்டும் இல்லாமல் ஒரே மாதத்தில் 10 கிலோ வரையிலும் எடையைக் குறைக்க முடியும்.

தேவையான பொருட்கள்

சீரகப்பொடி – 1 ஸ்பூன்
பட்டைத்தூள் – கால் ஸ்பூன்
இஞ்சி பவுடர் – அரை ஸ்பூன்
எலுமிச்சை தோல் – 2 துண்டு
தேன் – சுவைக்கேற்ப

செய்முறை:

அரை லிட்டர் அளவுக்கு தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.
நல்ல கொதிநிலையில் உள்ள தண்ணீரில் சீரகப்பொடி, இஞ்சிப்பொடி, பட்டைத்தூள், எலுமிச்சை தோல் ஆகியவற்றைப் போட்டு ஊறவிடுங்கள்.
அந்தப் பொருட்களின் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கிய பின்பு, வடிகட்டி, சற்று ஆறியவுடன் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
கட்டாயமாக ஒரு மாதத்திற்குள் 10 கிலோ வரை எடையைக் குறைக்க முடியும்