மார்பில் கெட்டிப்பட்டுள்ள சளியை வெளியேற்ற

மார்பில் கெட்டிப்பட்டுள்ள சளியை வெளியேற்ற

இதை சாப்பிட்டால் மார்புச் சளி மலத்தோடு வெளியேறிவிடும்!!

மழைக்காலம் ஆரம்பத்தை விட்டது மழைக்காலம் என்றாலே தண்ணீர் மாறுபடுவதால் அனைவருக்கும் காய்ச்சல் இருமல் சளி என அனைத்து பிரச்சினைகளும் வந்து விடும்.

அதிலும் இந்த மார்புச் சளியால் ஏகப்பட்ட அவஸ்தைகள் இருக்கும். நம்மால் ஒழுங்காக பேசவும் முடியாது சளி வெளியேவும் வராது, மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சு விடாத நிலைமை கூட ஏற்படும். அப்படிப்பட்ட மார்புச் சளி மூன்றே நாட்களில் மலத்தோடு கரைத்து விடும் இந்த எளிமையான முறையை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. வெற்றிலை ஐந்து
2. கிராம்பு 10.

செய்முறை:

1. முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

2. அதில் இரண்டு லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.

3. அதில் 10 கிராம்பை போட்டு கொள்ளுங்கள்.

4. ஐந்து வெற்றிலையை எடுத்து அதை நன்றாக கிழித்து தண்ணீரில் போடவும்.

5. இப்பொழுது அதை நீ ஒரு தட்டு வைத்து மூடவும்.

6. 20 நிமிடம் நன்று கொதிக்க விடவும்.

7. இப்பொழுது இந்த தண்ணீரை ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றிலை மற்றும் கிராம்பை எடுக்க வேண்டாம். எப்பொழுதெல்லாம் தண்ணீர் தாகம் எடுக்கிறதோ! அப்பொழுதெல்லாம் இந்த தண்ணீரை குடிக்கவும்.

8. அதேபோல் இதனை மூன்று நாட்களும் தொடர்ந்து இப்படி செய்து குடித்து வந்தால் 3 நாட்களில் எப்பேர்பட்ட நாள்பட்ட சளியாக இருந்தாலும் சளி மலம் வழியாக வந்துவிடும்.