இலைகள் மட்டுமின்றி, விதைகளும் ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகும்!!

இலைகள் மட்டுமின்றி, விதைகளும் ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகும்!!

துளசி விதைகளின் பயன்கள்: துளசி செடி பெரும்பாலான இந்திய வீடுகளில் வைக்கப்படும் ஒரு செடியாகும். ஏனெனில் இந்த தாவரத்தில் ஆயுர்வேத மற்றும் மத முக்கியத்துவம் மிகவும் அதிகமாக இருக்கிறது. பொதுவாக துளசி செடி மருத்துவ குணங்களின் பொக்கிஷமாக கருதப்படுகிறது, அதன் இலைகள் சளி-இருமல் ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது, 

ஆனால் துளசி விதைகள் நம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இந்த விதைகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளன. இந்த விதைகள் நமக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

துளசி விதைகளின் நன்மைகள் :

1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :
நோய் எதிர்ப்பு சக்தி எப்போதுமே முக்கியமானது, ஏனெனில் இது பல நோய்கள் மற்றும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பிறகு, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு துளசி விதையை கஷாயமாக செய்துக் குடிக்கலாம்.

2. செரிமானம் சிறப்பாக இருக்கும் :
உங்களுக்கு மலச்சிக்கல், அமிலத்தன்மை வாயு பிரச்சினை இருந்தால், இதற்கு துளசி விதைகளை தண்ணீரில் போட்டு வைக்கவும், மேலும் இந்த விதைகள் ஊறும் வரை காத்திருக்கவும். இவ்வாறு செய்வதால் விதையில் அமிலத்தன்மை உருவாகிறது. எனவே இந்த நீரை விதையுடன் குடித்து வந்தால் செரிமானம் குணமாகும்.

3. உடல் எடை குறையும் :
எடை அதிகரிப்பதால் சிரமப்படுபவர்களுக்கு, துளசி விதைகள் போக்கிஷமாகும், ஏனெனில் அதில்  கலோரிகள் மிகவும் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்ததாகவும் காணப்படுகின்றன. இந்த விதைகளை சாப்பிடுவதன் மூலம், ஒருவருக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது, இதன் காரணமாக எடை படிப்படியாக குறையத் தொடங்குகிறது.

4. டென்ஷனை போக்கும் :
மன அழுத்தத்தை குறைக்க துளசி விதைகளும் பயன்படும் என்பது வெகு சிலரே அறிந்திருப்பார்கள். நீங்கள் மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தை எதிர்கொண்டால், கண்டிப்பாக துளசி விதைகளை உட்கொள்ளுங்கள்.