முகத்தில் இருக்கும் பெரிய சரும துளைகளை சரி செய்ய வேண்டுமா?

முகத்தில் இருக்கும் பெரிய சரும துளைகளை சரி செய்ய வேண்டுமா?

பொதுவாக சிலருக்கு முகத்தில் பெரிய சரும துளைகள் இருக்கும். இப்படி பெரிய சரும துளைகள் இருப்பது நிறைய சரும பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

சரும துளைகள் திறந்து இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கு, தூசி மற்றும் அழுக்குகள் அதில் படிந்து உங்களுக்கு புதிய சிக்கலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் திறந்த பெரிய சரும துளைகள் உங்க முகத்தை களைப்புடன் காட்டும். எனவே இவற்றை எளிய முறையில் போக்க சில எளியவழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம். 

இரண்டு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து மிக்ஸ் செய்து செய்து கொள்ளுங்கள். இதை காட்டனில் தொட்டு முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.

ஒரு வாழைப்பழத் தோலை எடுத்து உங்கள் சருமத்தில் 15 நிமிடங்கள் வரை வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். குளிக்கச் செல்வதற்கு முன் இதை செய்து விடுவது நல்லது.

ஒரு ஸ்பூன் முல்தானி மட்டியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்து அதை சருமத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளலாம். இது நம்முடைய சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது. வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தி வந்தாவே விரைவில் சருமத்தில் இருக்கும் பெரிய துளைகளை சரிசெய்ய முடியும்   

ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து, ஓரிரு துளிகள் தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாக செய்து அதை சருமத்தில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து பின் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

இரண்டு ஸ்பூன் அளவுக்கு ஓட்ஸை பொடி செய்து எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிது பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அதை சருமத்தில் அப்ளை செய்து இப்போது, கலவையை உங்கள் தோலில் தடவி உலர விடவும். அது உலர ஆரம்பித்தவுடன், சில நிமிடங்களுக்கு உங்கள் முகத்தை ஸ்க்ரப் செய்யத் தொடங்குங்கள். மீதமுள்ள பேக்கை குளிர்ந்த நீரில் கழுவவும்.