அல்சர் பிரச்சினை உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு!!

அல்சர் பிரச்சினை உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு!! 

இந்த காலகட்டத்தில் பல பேருக்கு அல்சர் பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினையால் வயிறு எரிச்சல் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு எந்த உணவுகளையும் சாப்பிட முடியாது. அதேபோல எந்த உணவு சாப்பிட்டாலும் குமட்டல் உணர்வு தொடர்ந்து காணப்படும்.

அவ்வாறு இருப்பவர்கள் இதனை பின்பற்றினால் நிரந்தர தீர்வு கிடைக்கும். தினமும் காலை நேரத்தில் சிறிதளவு தேங்காய் பால் சேர்த்த உணவு உண்டு வந்தால் வயிற்றில் உள்ள புண் விரைவில் ஆறும்.

அதேபோல உணவில் தினந்தோறும் முட்டைக்கோஸ் பாகற்காய் அல்லது முருங்கைக்காய் இவற்றில் ஏதோ ஒன்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். காலையில் பிரட் மற்றும் வெண்ணை சாப்பிட்டு வந்தால் அல்சரால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

மேலும் ஆப்பிள் ஜூஸ் அகத்திக்கீரை சாறு அல்லது பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனை விரைவில் குணமடையும். உங்களுக்கு இறுதிவரை இந்த அல்சர் பிரச்சினை வராமல் இருக்க நெல்லிக்காய் ஜூஸுடன் சிறிதளவு தயிர் சேர்த்து குடித்து வர நல்ல மாற்றத்தை காணலாம்.

பலரால் வயிற்று எரிச்சல் தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் தேனை ஊற்றி குடித்து வந்தால் வயிற்று எரிச்சல் சரியாகும்.

அதேபோல தேனில் சிறிது வெள்ளை பூண்டு கலந்து சாப்பிட்டு வந்தாலும் அல்சர் குணமாகும். இது மட்டும் இன்றி வெந்தயம் கலந்த டீ மற்றும் கற்றாழை ஜூஸ் இவை அனைத்தும் அல்சருக்கு நல்ல ஒரு தீர்வை அளிக்கும்.