வயது கூடுவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தை எளிதாக சரி செய்யலாம்....

வயது கூடுவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தை எளிதாக சரி செய்யலாம்....

பொதுவாக வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று.

ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது. முகம், கை கால் போன்றவற்றில் சரும சுருக்கம் எளிதில் வந்து விடுகின்றது.

இதற்கு பல காரணம் கூறப்படுகின்றது. சிலருக்கு போதிய சத்து தோலில் இல்லாததாலும் சுருக்கம் ஏற்படுகிறது.

இத்தகைய சரும சுருக்கத்தை நீக்க சில வழிகள் உள்ளன. தற்போது இவற்றை பார்ப்போம்.  

 மிக்ஸியில் அடித்த கனிந்த செவ்வாழைப் பழம் இரண்டு ஸ்பூனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இது சரும வறட்சியைத் தடுத்து, ஈரப்பதத்தைக் கொடுக்கும்.

அவகோடா பழத்தை தோல் நீக்கி, மிக்ஸியில் அடித்து, முகத்தை நன்கு கழுவிய பின் அந்த அவகோடா பேஸ்ட்டை முகம் முழுக்க பரவலாகப் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதைச் செய்து வந்தால், ஏற்கெனவே இருக்கும் சரும சுருக்கங்கள் குறைவதுடன், மேலும் சுருக்கம் வராது.

முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் முகத்தில் தடவி, உலர்ந்து இறுகியதும் கழுவவும். வாரம் ஒருமுறை இதைச் செய்து வர, சரும சுருக்கம் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும். 

முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால், அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும். இவற்றுடன் கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும். இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும். வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகி விடும்.