பப்பாளி விதைகளும் தேனும் கலந்து சாப்பிடுங்க! நன்மைகள் தேடி வரும்!!
பப்பாளி விதைகளும் தேனும் கலந்து சாப்பிடுங்க! நன்மைகள் தேடி வரும்!!
பொதுவாக பப்பாளி பழம் அதனுடைய ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. இந்த குறைந்த கலோரி பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு பிரபலமானது.
மேலும் இது செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது.
பல மருத்துவப் பயன்கள்
இந்த பழத்தின் விதைகள் கூட பல உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கின்றது.
அதிலும் இதன் விதைகளுடன் தேன் கலந்து சாப்பிடுவது பல நன்மைகளை வாரி வழங்குகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
எப்படி எடுத்து கொள்ளலாம்?
2 டீஸ்பூன் பப்பாளி விதையுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனை குறைந்தது ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். அப்போது தான் விரைவில் பலன்கள் கிடைக்கும்.
நன்மைகள் :
பப்பாளி விதை மற்றும் தேனில் உள்ள சக்தி வாய்ந்த அமிலங்கள் மற்றும் ஆன்டிஆன்ஸிடன்ட்கள் வயிற்றில் உள்ள நச்சுக்களை வெயியேற்றி உடலை முழுமையாக சுத்தம் செய்கிறது.
வயிற்றில் உள்ள புழுக்கள் நமது செரிமான செயலை பாதிக்கிறது. பப்பாளி மற்றும் தேனில் உள்ள அமிலங்கள் புழுக்களை கொன்று செரிமானத்தை சீர் செய்கிறது.
பப்பாளி விதை, தேன் கலந்த கலவையில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது.
தேன் மற்றும் பப்பாளி விதையில் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது. எனவே, அதனை தொடர்ந்த சாப்பிட்டு வந்தால் நமது உடலின் சதைகளை ஒழுங்கு செய்து அழகான கட்டுக்கோப்பான உடலை பெற உதவுகிறது.
தேன் மற்றும் பப்பாளி விதை கலந்த கலவையில் குளுக்கோஸ் அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள சோர்வுடன் போராடி உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகின்றது.
தேன் மற்றும் பப்பாளி விதை கலவை சக்தி வாய்ந்த ஆன்டிஆன்ஸிடன்ட்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் காய்ச்சல் மற்றும் நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுத்து உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.
பப்பாளி விதை மற்றும் தேன் கலந்த கலவையில் சில வகை என்சைம்கள் உள்ளன. அவை ஆண்களின் விந்து எணணிக்கையை அதிகரித்து ஆண்மைக் குறைவு பிரச்சினை ஏற்டாமல் தடுக்கிறது.