வெறும் 2 ரூபாய் செலவில் பளபளக்கும் சருமத்தை பெற...

வெறும் 2 ரூபாய் செலவில்  பளபளக்கும் சருமத்தை பெற...

தினமும் 1 டம்ளர் இந்த ஜூஸ் குடிச்சு பாருங்க. கண்ணாடிய பார்த்த நீங்க அசந்து போவிங்க!!

நம்முடைய அழகை பாதுகாக்க வேண்டும் என்றால் முதலில் நாம் செய்ய வேண்டியது நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான் நம்முடைய அழகையும் நீண்ட நாட்களுக்கு பத்திரமாக பாதுகாக்க முடியும். என்னதான் சருமம் பளபளப்பாக மாறுவதற்கு மேலே பேக் போட்டு வந்தாலும், நாம் சாப்பிடக்கூடிய பொருட்களின் மூலம் தான் நம்முடைய சருமம் மேலும் மேலும் நிரந்தரமாக பளபளப்பாக மாறும். நீங்கள் சருமத்தின் மேலே பயன்படுத்தக்கூடிய பேக்குகளோடு சேர்த்து தினமும் இந்த ஜூஸையும் குடித்து வாங்க.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நறுக்கிய தக்காளி பழம் – 2, கழுவியை கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி, ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, இதை விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை வடிகட்டிக் கொள்ளுங்கள். சாறு மட்டும் நமக்கு கிடைத்திருக்கும். இதில் 2 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறை ஊற்றி, நன்றாக கலந்து அப்படியே குடித்து விடலாம். இனிப்பு சுவைக்கு தேவைப்பட்டால் தேன், வெல்லம், நாட்டு சர்க்கரை இவைகளை இதில் சேர்த்துக் கொள்ளலாம். இனிப்பு சுவை சேர்க்காமலும் அந்த ஜூஸை குடிக்கலாம்.

நம்முடைய சருமம் பொலிவு பெற தேவையான சத்துக்கள் அதிக அளவில் இந்த மூன்று பொருட்களிலும் கிடைக்கின்றது. மிக மிக மலிவாக நம்முடைய காய்கறி கடையிலேயே இந்த மூன்று பொருட்களும் கிடைக்கும். இந்த ஜூஸை காலை உணவு முடித்த பின்பு அரை மணி நேரம், ஒரு மணி நேரம் கழித்தும் சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் மாலை டீ காபிக்கு பதில் இப்படிப்பட்ட ஜூஸை குடித்து வருவது உடல் ஆரோக்கியத்துக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதுவும் நம்முடைய சரும அழகிற்கு ரொம்ப ரொம்ப நல்லது.

இதோடு சேர்த்து உங்களுடைய உணவில் அதிக அளவில் கேரட் ஆரஞ்சு பழம் நெல்லிக்காய் போன்ற பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் இந்த தக்காளி கொத்தமல்லி எலுமிச்சம் பழ ஜூஸ் குடிக்காதீங்க. வாரத்தில் மூன்று நாட்கள் இந்த ஜூசை குடிங்க. மீதமிருக்கக்கூடிய நாட்களில் கேரட் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், ஏபிசி ஜூஸ் என்று சொல்லப்படும் ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸ் இப்படி மாற்றி மாற்றி சரும அழகை கொடுக்கக் கூடிய சாறு வகைகளை குடியுங்கள். (அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்றி மாற்றி இந்த ஜூஸ் வகைகளை குடிக்க வேண்டும்.)

இதோடு நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம். நெல்லிக்காய் சாறு குடித்து வந்தாலும் நம்முடைய அழகும் ஆரோக்கியமும் நீண்ட நாட்களுக்கு பத்திரமாக பாதுகாக்கப்படும். வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள பொருட்களை அதிக அளவில் நாம் உணவோடு சேர்த்துக் கொண்டால் சரும அழகுக்கு மிகவும் நல்லது.

தக்காளி பழம், கொத்தமல்லி, எலுமிச்சை பழச்சாறு இந்த மூன்றிலுமே வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. இது நம்முடைய சருமத்தின் கொலாஜினை அதிகப்படுத்த மிக மிக உதவியாக இருக்கும். சருமத்தில் கொலாஜின் சத்து குறையும் போது தான் வயதான தோற்றம் சீக்கிரம் தெரியும். இந்த மூன்று பொருளின் காம்பினேஷனில் செய்யப்பட்ட ஜூஸ் குடிப்பதற்கும் சுவையாகவும் இருக்கும். முயற்சி செய்து பாருங்கள். மூன்றே வாரத்தில் சரும அழகில் நல்ல வித்தியாசத்தை உணருவீங்க.