இந்த எண்ணெயை நெற்றியில் தேய்த்தால் போதும் 10 நிமிடத்தில் தூங்கலாம்!!

இந்த  எண்ணெயை நெற்றியில் தேய்த்தால் போதும் 10 நிமிடத்தில் தூங்கலாம்!!

இந்த காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை இருக்கும் பெரிய பிரச்சினை தூக்கமின்மை தான். வேலைப்பளு குடும்ப சூழல் ஆகிய மன அழுத்தங்கள் ஆகியவை ஒரு மனிதருக்கு நிம்மதியான தூக்கத்தை அளிப்பதில்லை. மேலும் அளவுக்கு அதிகமாக செல்போன் லேப்டாப் உபயோகம் செய்வதினாலும் தூக்கமின்மை ஏற்படும். மனிதனாக பிறக்கும் அனைவரும் கட்டாயம் ஆறு மணி நேரம் ஆவது நல்ல உறக்கத்தை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாளடைவில் உடல் உபாதைகள் ஏற்படும். இவ்வாறு தூக்கம் இன்மையால் அவதிப்படுபவர்கள் மருத்துவரையும் மற்றும் அதற்கான தைலத்தையும் தேடி அலைவர். அவ்வாறு இருப்பவர்கள் இனி கவலைப்பட வேண்டாம். இந்த ஒரு தைலத்தை வீட்டிலேயே செய்து வைத்தால் போதும், தினம்தோறும் எந்தப் பிரச்சினையும் இன்றி உடனடியாக தூக்கம் வந்துவிடும்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் 1/2 கப்

தேன் மெழுகு ஒரு டேபிள் ஸ்பூன்

வைட்டமின் ஈ எண்ணெய் ஒரு டீஸ்பூன்

ஆரஞ்சு எண்ணெய் எட்டு துளிகள்

(இது நறுமணத்திற்காக பயன்படுத்துவது) ஆரஞ்சு எண்ணெய் இல்லாவிட்டாலும் உங்களுக்கு பிடித்தமான நறுமணமிக்க எண்ணையை உபயோகம் செய்து கொள்ளலாம்.

சீமை சாமந்தி எண்ணெய் அல்லது சீமை சாமந்தி தேநீர் பை ஒன்று

செய்முறை:

முதலில் தேங்காய் எண்ணெயை சூடேற்றி கீழே இறக்கி வைக்க வேண்டும். பிறகு அந்த எண்ணெய்யில் சீமை சாமந்தி தேனீர் அல்லது அப்பையை போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து ஊறவைத்த பையைப் பிழிந்து எடுத்துக் கொள்ளலாம். மற்றொருபுறம் ஒரு வானலியில் தேன்மொழி உருக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அந்த தேங்காய் எண்ணெயுடன் சேர்க்க வேண்டும். இறுதியில் நறுமண எண்ணையை எட்டு துளிகள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் விட்டமின் E எண்ணெயையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு நன்றாக கலக்கி காற்று போகாத ஒரு ஏர்டைட் கண்டெய்னரில் போட்டு வைத்துக் கொள்ளலாம். இது தலையில் தேய்த்து போடும் பதத்திற்கு வரும் வரை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.

தினந்தோறும் இரவு தூங்குவதற்கு முன் இந்த தைலத்தை நெற்றியில் தடவி மசாஜ் செய்தால் 5 லிருந்து 10 நிமிடத்திற்குள் தூக்கம் வந்துவிடும்.