1-3 இரவில் மரு உதிர... பூண்டை தடவினாலே போதும்!!

1-3 இரவில் மரு உதிர... பூண்டை தடவினாலே போதும்!!

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் இருக்கும்.இந்த மருக்கள் கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்றாக சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.
இவ்வாறு உருவாகும் மருக்களால் தோலுக்கு எந்தவித பிரச்சினைகள் இல்லை என்றாலும் இது அழகினை கெடுக்கும்.இதனால் பலரும் இந்த மருக்களை நீக்க அறுவை சிகிச்சை செய்கின்றன.

அதுமட்டுமின்றி இந்த அறுவை சிகிச்சைக்கும் பணமும் அதிகமாகும். எனவே குறைந்த செலவில் எந்தவித பக்க விளைவுகளுமின்றி எளிய முறையில் வீட்டிலேயே இந்த மருக்களை வேரோடு உதிர செய்யலாம் வாங்கள் அதை எப்படி என்று பார்ப்போம்.

இதற்கு தேவையான பொருட்கள் பூண்டு மற்றும் விளக்கெண்ணெய் ஆகும்.

இரண்டிலிருந்து மூன்று பற்கள் பூண்டை நன்றாக அரைத்து பேஸ்ட் போன்ற பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்டில் மூன்று சொட்டு விளக்கெண்ணெய் விட்டு மரு உள்ள இடத்தில் இரவு தூங்கும் பொழுது தடவ வேண்டும்.

இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து தடவி வந்தால் உங்கள் மரு வேரோடு உதிர்ந்து கீழே விழும். மருவின் அளவைப் பொறுத்து இந்த மருவானது முதல் நாள் இரவிலிருந்து மூன்று நாட்களுக்குள் விழுந்து விடும்.