சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறதா கருஞ்சீரகம் ...?
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறதா கருஞ்சீரகம் ...?
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு
கருஞ்சீரகம் சிறந்த மருந்தாகும் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரோலின் அளவை
அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரோலை
குறைத்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க கருஞ்சீரகம் உதவுகின்றது.
சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை வெண்ணீர் மற்றும் தேன் கலந்து காலை, மாலை குடித்து வர கற்கள் கரைந்து சிறுநீருடன் வெளியேறும்.
நாள்பட்ட இருமல் அல்லது சளி தொந்தரவு இருந்தால் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் அரை தேக்கரண்டி பூண்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை கரைக்கும் சக்தி கொண்டது.
கருஞ்சீரகம் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்கழிவுகளும் அகன்று விடும். மற்றும் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை பெற முடியும்.
கூந்தல் வளர்ச்சிக்கு கருஞ்சீரக எண்ணெய் உதவியாக இருக்கும். வழுக்கை தலையிலும் முடியை வளர வைக்கும் ஆற்றல் கருஞ்சீரக எண்ணெய்க்கு உண்டு.
தலைவலியால் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தி வந்தால் இதிலிருந்து விடுபடலாம். முடி வளர்ச்சி, பொடுகு, கிருமி தொற்று, பலவீனமான முடி மற்றும் நரை முடி போன்ற பல பிரச்சினைகளை சரி செய்யும் ஆற்றல் கருஞ்சீரகம் எண்ணெய்க்கு உண்டு.