சருமத்தை மினுமினுப்பாக வைத்து கொள்ள ஆசையா? இதோ சில எளிய டிப்ஸ்...

சருமத்தை மினுமினுப்பாக வைத்து கொள்ள ஆசையா? இதோ சில எளிய டிப்ஸ்...

பொதுவாக பலருக்கு சருமத்தை பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை காணப்படும்.

இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களை தான் நம்மில் பலர் வாங்கி போடுவதுண்டு. இருப்பினும் இது தற்காலிக தீர்வினை தான் தரும்.

இயற்கை முறையில் சருமத்தை மினுமினுப்பாக வைத்து கொள்ள வேண்டும். இதற்கு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

ஆப்பிள் துண்டுகளை நன்றாக அரைத்து தேன், ஓட்ஸ் பவுடர், ஆகியவற்றுடன் சேர்த்து க்ரீம் போல ஆக்கி அதையும் மேற்குறிப்பிட்ட முறையில் அரை மணி நேரம் முகத்தில் போட்டு பின்பு கழுவலாம். இரண்டு வழிகளிலும் வறண்ட சருமத்தைப் போக்க முடியும். உங்களுக்கு எந்த வகை வசதியாக இருக்கிறதோ அதைப் பின்பற்றுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

தயிரிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட மோரை, முகத்தில் தடவி, சிறிது நேரம் உலரவைத்து, பின்பு நன்கு கழுவினால், முகப்பொலிவை உணரலாம்.

வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் தக்காளியை சாறாக பிழிந்து அதை முகத்தில் தடவி உலர வைத்து, பின்பு அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் உரிய பலனை உணர்வீர்கள்.

வெள்ளரியைத் துண்டு துண்டாக நறுக்கி முகத்தில் தடவி உலர வைக்கலாம். 20 முதல் 30 நிமிடங்களில் சருமத்தைப் பளபளப்பாக்கி விடும்.

தக்காளி மற்றும் வெள்ளரி இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். எப்படி என்றால் சாறாகப் பிழிந்து.. இவை இரண்டையும் நன்றாக அரைத்து சாறாக்கி முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். அதன் பிறகு கழுவினால் வறண்ட சருமம் சரியாகியிருக்கும்.

முல்தானி மட்டி பொடியைப் பன்னீருடன் கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து பின்னர் கழுவினால், சரும வறட்சி நீங்கும். இதனைத் தினசரி செய்யலாம். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இதை முயலலாம்.

தூய மஞ்சளை நன்கு அரைத்து, அதில் நீர் சேர்த்து பசை போல் ஆக்கி, முகத்தில் தடவி, அது உலர்ந்த பிறகு நன்கு கழுவ வேண்டும்.

வெண்ணெய்யை அப்படியே முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து, பின்பு நீரில் கழுவினால், வறண்ட சருமம் நீங்கும்.

அரிசி மாவுடன், வெள்ளரிச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கி, முகத்தில் தடவி, சிறிது நேரம் உலர வைத்து பின்பு கழுவினால், வறண்ட சருமத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

ஆவாரம் பொடியுடன், கஸ்தூரி மஞ்சள் மற்றும் கசகசாவை நன்றாக அரைத்து நீரில் சேர்த்துக் கலக்க வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்துவிட்டு பின்பு நன்கு கழுவினால், வறண்ட சருமம் மாறும்