ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? இந்த மூலிகைகளை இப்படி எடுங்க போதும்!!

ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? இந்த மூலிகைகளை இப்படி எடுங்க போதும்!!

பொதுவாக இன்றைய காலத்தில் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான பிரச்சினைகளில் ஞாபக சக்தி குறைபாடும் ஒன்று.

இதற்கு காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், போதிய சக்தியின்மையாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே இதற்கு காரணம்.

இதன் காரணமாக, மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது.

எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்து விடும். ஞபக சக்தி குறைபாடுகளுக்கு, சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணமாகும்.

அந்தவகையில் ஞபக சக்தியை எளிய முறையில் அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.

வல்லாரை இலையை நசுக்கி கூடவே நெல்லிக்காயும் சேர்த்து, தேன் கலந்து கொடுக்க வேண்டும். இதை அதிகாலையில் குடிப்பது நல்ல பலன் தரும். இது மூளையை சிறப்பாக வைத்திருக்க உதவும். வல்லாரைக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் தன்மை இருக்கும்.

நெல்லிக்காயும் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. இதை பவுடராக்கி தேனில்கலந்து குடிக்கலாம். இல்லையெனில் அப்படியேவும் சாப்பிடலாம், ஜூஸாக்கி பாலில் கலந்தும் குடிக்கலாம்.

நீர் பிரம்மி நினைவாற்றலை அதிகரிக்க உதவும். இதை தேனுடன் கலந்து குடிக்கலாம். இது நினைவாற்றலை மட்டுமல்லாமல், கவனச் சிதறலையும் கூட சரி செய்யும்.

அமுக்குரான் பொடி மருத்துவத்தில் பிரபலமானது. இதை பசும்பாலுடன் கலந்து குடிக்கலாம். இது மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.

 துளசியை  நீரில் கொதிக்க வைத்து டீயாக குடிக்கலாம். இது மன நலன் பாதித்தவர்களுக்கான சிகிச்சை முறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தினசரி ஒரு டீஸ்பூன் பவுடரை பாலில் கலந்து குடிக்கலாம்.

இரட்டை மதுரம் வேரைக் கொஞ்சம் பொடியாக்கி, அதில் இஞ்சி, கடுகு, சீரகம், உள்ளிட்டவற்றைக் கலந்து பொடியாக்கி கால் டீஸ்பூன் அளவு எடுத்து 5 கிராம் பசும் நெய்யைக் கலந்து சாப்பிட வேண்டும். இது பவுடராகவும் கடையில் கிடைக்கும்.