அடிக்கடி சத்தமா வாயு பிரியுதா? நாற்றமும் வீசுதா?

அடிக்கடி சத்தமா வாயு பிரியுதா? நாற்றமும் வீசுதா? இதுல ஏதாவது ஒண்ணு சாப்பிடுங்க... நாற்றம் வீசாது...

வாயுத் தொல்லையும் வயிறு மந்தம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏராளமானோருக்கு இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கியமாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளும் அதனால் ஏற்படும் ஜீரணக் கோளாறுகளும் தான். இவற்றை மருந்துகள் எதுவும் இல்லாமல் வீட்டில் உள்ள மிக எளிமையான பொருள்களை வைத்து எப்படி சரிசெய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

வாயு பிரிதல் எல்லோருக்கும் உண்டாகிற இயல்பான விஷயம் தான். ஆனால் பலருக்கு பலத்த சத்தத்துடன் வெளியேறும், சிலருக்கு வெளியேறுவதே தெரியாது. சிலருக்கு பயங்கர துர்நாற்றத்துடன் பிரியும். இவை எல்லாவற்றிற்குமே அடிப்படையாக இருக்கும் ஒரு காரணம் என்னவென்றால், அஜீரணக் கோளாறு தான். எடுத்துக் கொண்ட உணவுகள் சரியாக ஜீரணமாகாமல் இருக்கும். ஜீரணமாகாமல் இருப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் கீழ்வரும் சில பொருள்களை வைத்து சரிசெய்ய முடியும். துர்நாற்றமில்லாமல் வாயு பிரியும்.

வாயு தொல்லையை போக்கும் ஓமம் :

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதில் ஓமம் மிகச்சிறப்பாகச் செயவ்படும்.

வயிறு வலியை சரிசெய்வதோடு வாயுத்தொல்லை ஏற்படாமல் பாதுகாக்கும். ஜீரண சக்தியை மேம்படுத்தும். எல்லாவற்றையும் விட குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவி செய்யும்.

வாயு பிரிதல் பிரச்சினை அதிகமாக இருக்கும்போதும், வயிறு அசௌகரியமாக இருக்கும்போது, உணவு உண்ட பின் வெதுவெதுப்பான நீரில் ஓமத்தைக் கலந்து சிறிது நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம்.

வாயு தொல்லையை போக்கும் பெருங்காயம் :

நம்முடைய சமையலிலும் சரி. உடலிலும் சரி மிகப்பெரிய மாயாஜாலங்களை இந்த பெருங்காயத்தால் செய்ய முடியும். இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் அளவுக்கு பெருங்காயத் தூளை சேர்த்து நன்கு கலந்து, அதை சாப்பாட்டுக்குப் பிறகோ அல்லது வயிறு எப்போமெல்லாம் அசௌகரியமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் குடித்து வரலாம். உடனடி தீர்வு கிடைக்கும்.

வாயு தொல்லையை நீக்கும் சீரகம் :

நம்முடைய ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுவது சீரகம். நம்முடைய அகத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுவதால் தான் இதற்கு சீரகம் என்ற பெயர். டயட்டீஷியன்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் சொல்லும் அறிவுரை என்ன தெரியுமா? தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தான்.

இப்படி குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தாலே உங்களுக்கு எப்போதும் வயிறு உப்பசம், வயிறு வீக்கம் மற்றும் வாயுத் தொல்லைகள் ஏற்படாது.

வாயு தொல்லையை நீக்கும் லெமன் சோடா :

வயிறு மந்தமாக இருப்பது மற்றும் வாயுத் தொல்லையை சரிசெய்ய லெமன் சோடா மிகவும் உதவியாக இருக்கும். லெமன் சோடா என்றால் உடனே கார்பனேட்டட் பானங்களை வாங்கிக் குடிக்காதீர்கள்.

வீட்டிலேயே எலுமிச்சை சாறுடன் சிறிது சமையல் சோடாவை தண்ணீரில் கலந்தால் லெமன் சோடா ரெடியாகிவிடும். இதை உணவுக்குப் பின் ஒரு கிளாஸ் அளவுக்கு குடித்து வர வாயுத் தொல்லையில் இருந்து உடனடியான தீர்வு கிடைக்கும்.

மதியம் மற்றும் இரவு அதிகமாக சாப்பிட்டு விட்டால் ஜீரணிப்பது கடினமாகிவிடும். அந்த சமயங்களில் இந்த லெமன் சோடாவை குடித்து வரலாம்.

வாயு தொல்லையை நீக்கும் திரிபலா :

திரிபலா உடலில் ஜீரணக் கோளாறுகள் செம்பந்தமாக உண்டாகும் பல பிரச்சினைகளைத் தீர்க்கும் அற்புத மருந்து. குறிப்பாக அசிடிட்டி, வாயுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஏற்ற அருமருந்து.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். வயிறு மந்தமாக இருப்பது போன்ற பிரச்சினைகள் அடிககடி உங்களுக்கு ஏற்பட்டால் தொடர்ந்து திரிபலாவை தினசரி சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

காலையிலோ அல்லது இரவு படுக்கப் போகும் முன்னரோ ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் திரிபலா பொடியை கலந்து குடித்து வர, வயிறு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளும் தீரும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள் :

உங்களுடைய தினசரி உணவில் புதினா அல்லது இஞ்சி, கிரீன் டீயை சேர்த்துக் கொள்ளலாம், இதனால் வயிறு வீக்கம் மற்றும் வாயு பிரியும் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

கடினமான உணவை உட்கொள்வதைக் குறைப்பது நிச்சயமாக வாயு பிரிதவ் பிரச்சினைகளைக் குறைக்க உதவும்.

அதற்கு பதிலாக, உடலுக்குத் தேவையான அளவு, மூன்று வேளையாக சாப்பிடுவதை பிரித்து ஆறு வேளையாக உணவை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிடலாம். அது ஜீரணிப்பதற்கு மிகவும் இலகுவாக இருக்கும். இத்தகைய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் உடல் இயக்கங்களும் சீராக இருக்கும்.

தினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்வது, மிக முக்கியம். அது வயிறு வீக்கம் மற்றும் அடிக்கடி வாயு பிரிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.