வாரம் தவறாமல் பேரிக்காய் சாப்பிடுவதனால் இவ்வளவு அற்புதமா?

வாரம் தவறாமல் பேரிக்காய் சாப்பிடுவதனால் இவ்வளவு அற்புதமா?

பேரிக்காய் ஆப்பிளை விட சக்தி படைத்தது என்று சொல்லப்படுகின்றது.

இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

பேரிக்காய் அற்புத மருத்துவ குணங்கள் கொண்டது. இது உடலில் உள்ள அனைத்து நோய்களையும் நொடியில் போக்கும் சக்தி படைத்தது. பேரிக்காய் சாப்பிடுவதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பார்ப்போம்.

எலும்புகள் மற்றும் பற்கள் பலவீனமாக உள்ளவர்கள் பேரிக்காய் சாப்பிடலாம், இது நல்ல வலுவடைய உதவுகிறது.

இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை வலுவடைய, நல்ல ஆற்றல் தருகிறது பேரிக்காய். இதை அடிக்கடி சாப்பிட்டால் நல்ல பசியும் எடுக்கும். செரிமானமும் நன்றாக ஆகும்.

பேரிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

தீடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல தீர்வுக் காண முடியும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள், பேரிக்காய் சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தரும்.

நாள்பட்ட மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் இருப்பவர்கள், பேரிக்காய் அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால், மூட்டு வீக்கம் குறையும்.

பேரிக்காயில் உள்ள குளுட்டோதியோனைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, பக்கவாதம் ஏற்படுவதையும் தடுக்கும்.

கர்ப்பிணி பெண்கள் அன்றாட உணவில் பேரிக்காய் சேர்த்து உண்டு வந்தால், பிறக்கும் குழந்தை வலுவாக பிறக்கும். மேலும், இது தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கும் பால் சுரக்க உதவுகிறது.

தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

பேரிக்காய் உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.