கொலஸ்ட்ரால் பிரச்சினைக்கு உடனடி தீர்வு தரும் பேரிச்சம் பழம்…

கொலஸ்ட்ரால் பிரச்சினைக்கு உடனடி தீர்வு தரும் பேரிச்சம் பழம்…!

பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் மூன்று முதல் ஐந்து பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம்.

கெட்ட கொலஸ்ட்ரால்:

பேரிச்சம் பழம் எல்.டி.எல் என்கிற கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, ரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தி, இதயத்தில் கொழுப்புகள் சேராமல் பார்த்து கொள்கிறது. சீரான, ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவும். ஆதலால் தினமும் ஒருவர் பேரிச்சம் பழம் சாப்பிடுவது அவசியம்.

சர்க்கரை அளவை சீராக்குகிறது:

பேரிச்சம்பழத்தில் மக்னீசியம் என்னும் நோய் எதிர்ப்பு அழற்சிப்பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். மேலும், பக்கவாதம், இதயம் சார்ந்த பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது. இவை உடலுக்கு ஊட்டமளிக்கிறது. இதில் இருக்கும், மெக்னீசியம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குகிறது.

உயர் இரத்த அழுத்தம்:

பேரிச்சம் பழத்தில் ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். எனவே உயர்இரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

செரிமான பிரச்சினை:

பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல், செரிமான பிரச்சினைகள் இருப்பின், தினமும் ஒருவர் மூன்று பேரிச்சம் பழத்தை சாப்பிட வேண்டும். இதில், உள்ள நார்ச்சத்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்