மகாராணி போல மாற மேக்கப் வேணாங்க. இந்த மைசூர் டால் குளியல் பொடியே போதும்
மகாராணி போல மாற மேக்கப் வேணாங்க. இந்த மைசூர் டால் குளியல் பொடியே போதும். சோப்பு போட்டு குளிக்காமலேயே நீங்க பேரழகியா மாறிடுவீங்க!!
ஒரு மாதம் முழுவதும் இந்த குளியல் பொடியை போட்டு குளித்து வாருங்கள். திரும்பவும் சோப்பு போட்டு குளிக்க வேண்டும் என்ற ஆசையை உங்களுக்கு வராது. கொஞ்சம் நேரம் அதிகம் எடுத்தாலும், சிரமப்பட்டு இந்த பொடியை போட்டு குளிக்க தொடங்கி விடுவீர்கள்.
ஏனென்றால் உங்களுடைய சருமம் அப்படியே மகாராணிகளின் சருமம் போல பொலிவாக மின்னத் தொடங்கிவிடும். மிக மிக சுலபமான முறையில் ஒரு சில பொருட்களை வைத்தே இயற்கையான குளியல் பொடி தயாரிப்பது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இந்த குளியல் பொடி தயார் செய்ய மைசூர் பருப்பு பொடி – 1 கப், அதிமதுர பொடி – 1/4 கப், கஸ்தூரி மஞ்சள் தூள் – 1/4 கப், இந்த மூன்று பொருட்கள் தேவை. அதிமதுரம் பொடியாக நாட்டு மருந்து கடைகளில் விற்கின்றது. அதை வாங்கிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் அதிமதுர கட்டைகளாக கிடைத்தால் அதை வாங்கி இடித்து நைசாக பொடி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். கஸ்தூரி மஞ்சளும் அதே போல் தான் பொடியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். கஸ்தூரி மஞ்சள் சக்கையை வாங்கி நீங்களே பொடித்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கொஞ்சம் நிறைய அளவில் மைசூர் டால் வாங்கி ரைஸ் மில்லில் கொடுத்தால் பொடியாக அரைத்துக் கொடுத்து விடுவார்கள். அதையும் பொடி செய்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா பொடியும் நைசாக இருக்க வேண்டும். கொரகொரப்பாக இருக்கக் கூடாது. ஒரு சிறிய கிண்ணத்தில் மைசூர் டால், அதிமதுரம், கஸ்தூரி மஞ்சள் இந்த மூன்று பொடியையும் மேலே சொன்ன அளவுகளில் போட்டு நன்றாக கலந்து ஒரு காற்று புகாத டப்பியில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நமக்கு தேவையான குளியல் பொடி தயார்.
இந்தக் குளியல் பொடியை தேவையான அளவு ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு லெமன் ஜூஸ் 1 ஸ்பூன் ஊற்றி, பால் அல்லது ரோஸ் வாட்டர் ஊற்றி, இதை பேஸ்ட் ஆக கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளித்துக் கொள்ளலாம். இதை முகத்திற்கும் பயன்படுத்தலாம் தவறு கிடையாது. முகத்திற்கு பயன்படுத்தும் போது லெமன் ஜூஸ் சேர்க்காதீங்க. சில பேருக்கு லெமன் ஜூஸ் அலர்ஜியை கொடுக்கும். அதே போல ரொம்பவும் நைசாக இருக்கக்கூடிய பொடியாக இருந்தால் முகத்தில் போட்டு தேய்த்து குளிக்கலாம். இந்த குளியல் பொடி கொரகொரப்பாக இருந்தால் முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
தினமும் இரண்டு நிமிடம் போல இந்த குளியல் பொடியை உடல் முழுவதும் மசாஜ் செய்து விட்டு ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, சோப்பு போடாமல் வெறும் தண்ணீரை ஊற்றி குளித்து வாருங்கள். பிறகு உங்களுடைய சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
இந்த பொடியை கலக்க பால் தயிர் ரோஸ் வாட்டர் தவிர அரிசி கழுவிய தண்ணீர் அல்லது அரிசி வடித்த கஞ்சி தண்ணீரை கூட பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதுவுமே இல்லை என்றால் வெறும் தண்ணீரில் கலந்து கூட இந்த பொடியை உடம்புக்கு தேய்த்து பயன்படுத்தலாம். நல்ல ரிசல்ட் கிடைக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. சோப்பு பயன்படுத்துவதை விட இந்த குளியல் பொடியின் மூலம் கிடைக்கக்கூடிய அழகு பேரழக இருக்கும்.