உடல் கொழுப்பை மின்னல் வேகத்தில் கரைக்க வேண்டுமா?
உடல் கொழுப்பை மின்னல் வேகத்தில் கரைக்க வேண்டுமா?
உடல் கொழுப்பை கரைக்க..
உடலில் நச்சு அதிகரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த உடலின் செயற்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்க வேண்டியது அவசியமாகும்.
இயற்கையான முறையில் இந்த கழிவுகள் வெளியேறினாலும், அது சீராக நடைபெற சில உணவுகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன.
அந்தவகையில் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவது மட்டுமல்ல உடலில் உள்ள அதிகமான கொழுப்பையும் நீக்கும் ஒரு அற்புதமான மருந்து ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
தேவையானவை :
மிளகு
துருவிய இஞ்சி சாறு
தக்காளி சாறு
எலுமிச்சை சாறு
செலெரி இலை
செய்முறை : மிளகு, துருவிய இஞ்சி, தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்துகொள்ளவும். இந்த கலவை அடியில் நன்கு தேங்கியவுடன் தெளிவான நீரை வேறொரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
செலெரி இலைகளை இந்த பானத்தின் மீது போடவும். இதை குடிக்கையில் செலெரி இலைகளை சாப்பிட்டுக் கொண்டே குடிக்கவும். இதை தினமும் காலையிலும், மாலையிலும் இரவிலும் பருகிவர நல்ல பலன்கள் தெரியும். அடியில் தேங்கியுள்ள பொருட்களை பிரிட்ஜில் வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.
நீங்கள் வழக்கமாக பருகும் அளவை விட அதிக அளவு தண்ணீரைப் பருகி நச்சுக்களை நீக்குங்கள். சற்று ஓய்வாக இருக்கையில் நன்கு மூச்சுப் பயிற்சி மேற்கொண்டு நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்குங்கள்.
இயற்கையான சருமப் பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நச்சுப் பொருட்களை தவிருங்கள். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் நச்சுக்களை நீக்கவும் ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.