அஸ்வகந்தாவின் பவர் பத்தி தெரிஞ்சிகிட்டு சாப்பிடுங்க…

அஸ்வகந்தாவின் பவர் பத்தி தெரிஞ்சிகிட்டு அதை வாங்கி பத்திரப்படுத்தி சாப்பிடுங்க…

அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவப் பயன்கள் கொண்டது. வடமொழியில் அஸ்வகந்தா எனவும், தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா என்றும் அழைக்கப்படுகிறது.

இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகை உண்டு. சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது என்று பாரம்பரிய மருத்துவம் பரிந்துரைக்கிறது. மூலிகை வயாக்ரா என்றும் இதற்கு இன்னொரு பெயரும் உண்டு.
 
அஸ்வகந்தா என்பதற்கு சமஸ்கிருதச் சொல்லாகும் இதன் பொருள் “குதிரையின் வாசனை” ஆகும். அஸ்வகந்தா மூலிகை உடல் வலிமையை தருகிறது. மேலும் ஆண் மற்றும் பெண் நரம்பு மற்றும் இனப்பெருக்க அமைப்புகளை வளப்படுத்துவதை உறுதி செய்கிறது.

அஸ்வகந்தாவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனசோர்வு, உடல் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது.

இதிலுள்ள அடோப்டோஜினிக் மற்றும் ஊட்டச்சத்து சார் பண்புகள் மனச்சோர்வை குறைக்கிறது. இதனால் நம் மன அழுத்தமானது குறைந்து நிம்மதியான தூக்கத்தையும் தருகிறது. ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது.
 
அஸ்வகந்தா இனப்பெருக்க அமைப்பு, நோயெதிர்ப்பு அமைப்பு, தைராய்டு அமைப்பு போன்ற பல்வேறு உடல் அமைப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது.

அஸ்வகந்தா ஆயுர்வேத மருத்துவத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது உடலுக்கு புத்துணர்ச்சியளிப்பது மட்டுமல்லாமல், அனைத்து உடல் செயல்பாடுகளையும் வலுப்படுத்துகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அட்ரீனல் சுரப்பிகளின் ஆரோக்கியமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

இது தசைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் தசைக்கூட்டு கோளாறுகளுக்கு திறம்பட சிகிச்சையளிக்கிறது.இது நீடித்த ஆற்றல், வலிமை மற்றும் உடலின் பல்வேறு செயல்பாடுகளை ஆதரிக்கும் ஆற்றலை வழங்குகிறது.

இது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் ஆரோக்கியமான இனப்பெருக்க அமைப்புக்கு பெரிதும் உதவுகிறது.மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் உளவியல் செயல்முறையை அமைதிப்படுத்துகிறது.

தைராய்டு சுரப்பிகளின் வளர்ச்சியை சீராக வைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பி அதிகரிக்க, இந்த அஸ்வகந்தா கிழங்கு பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான மூட்டுகள் மற்றும் முதுகெலும்பு வளர்ச்சியை ஆதரிக்கிறது.

புற்றுநோயியலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மூலிகை இது. இதற்கு புற்று நோய் செல்களையும், புற்றுநோய் கட்டிகளையும் அழிக்கும் தன்மை உள்ளது. இது உடலை கீமோதெரபியின் பக்க விளைவுகளிலிருந்து காக்கிறது.

அஷ்வகந்தாவின் அழற்சி நீக்கும் தன்மை இதய நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதய தசைகளை வலிமை படுத்துகிறது.கொழுப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவப் பயன்கள் கொண்டது.