உயிரணுக்களை அதிகமாக்கும் பூசணிக்காய் இலை சூப்!!

உயிரணுக்களை அதிகமாக்கும் பூசணிக்காய் இலை சூப்!!

பூசணிக்காய் இலைகள் கண் ஆரோக்கியம், புற்று நோய், நோயெதிர்ப்பு சக்தி, சீரண சக்தி, கொலஸ்ட்ரால் அளவை குறைத்தல், கருவுறுதல் திறனை அதிகரித்தல் போன்ற எண்ணற்ற நன்மைகளை நமக்கு அளிக்கிறது.

பூசணிக்காய் இலையில் கால்சியம், போலிக் அமிலம் இரும்புச் சத்து, விட்டமின் ஈ, விட்டமின் பி6, மக்னீசியம் பாஸ்பரஸ், தயமின், நியசின், நார்ச்சத்து போன்ற எண்ணற்ற ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன.

இந்த இலைகள் மற்ற இலைகளைப் போல் கசப்பதில்லை. இதை நீங்கள் சூப், சாலட் போன்றவற்றில் கூட சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

* பூசணிக்காய் இவைகள்

* ஆலிவ் ஆயில்

* உப்பு

* பூண்டு

செய்முறை:

ஒரு சூடான பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி அதில் பூசணிக்காய் இலைகள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

இதே மாதிரி காய்கறிகளையும் வதக்கி வைத்துக் கொள்ளுங்கள். வதக்கிய பூசணிக்காய் இலைகளுடன் பூண்டு சேர்த்து கொண்டால் இன்னும் டேஸ்ட் அதிகரிக்கும். அதை அப்படியே சூடாக பரிமாறி சுவைக்கலாம்.

பயன்கள் :

நீண்ட காலம் இளமையாக இருக்க பூசணிக்காய் இலைகளை உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சீக்கிரம் வயதாகுவதை தடுத்து இளமையை தக்க வைக்கிறது.

வயதாகுவதால் ஏற்படும் கண் குறைபாட்டை தடுக்க இதில் விட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது.

ஆண்களின் விந்தணுக்களின் குறைபாடு போன்றவற்றை போக்கி விந்தணுக்களின் வளத்தை அதிகரித்து குழந்தை பாக்கியத்தை கொடுக்கிறது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் ஹைப்போ கிளைசெமிக் இந்த பூசணிக்காய் இலையின் அதிகமாக உள்ளது.