தலை முடிக்கு 10 மடங்கு யானை பலம் கிடைக்கும்
அரிசி வடித்த கஞ்சியோடு இந்த இலையை சேர்த்து தலையில் போட்டால் தலை முடிக்கு 10 மடங்கு யானை பலம் கிடைக்கும். பிறகு முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தவே முடியாது!!
தலை முடி வளர்ச்சிக்கு பத்து மடங்கு அதிக பலத்தை கொடுக்க கூடிய ஒரு குறிப்பை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சில பேருக்கு தலை முடி ரொம்பவும் பலவீனமாக இருக்கும். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தலையை சீவாமலேயே தலையில் இருந்து முடி உதிரும். முடி உதிர்வு பிரச்சினைக்கு ஒரு சில நாட்களிலேயே தீர்வு கொடுக்கக்கூடிய சக்தி செம்பருத்தி இலைக்கு உண்டு. செம்பருத்தி பூவையும் நாம் தலை முடி வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம். செம்பருத்தி இலையையும் பயன்படுத்துவோம். ஆனால் செம்பருத்தி பூவை விட, செம்பருத்தி இலையில் முடி வளர்ச்சிக்கு தேவையான அதிக சத்து உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆகவே இந்த குறிப்பை நாம் செம்பருத்திப் பூ இலையை வைத்து தான் செய்யப் போகின்றோம். இந்த குறிப்புக்கு மூன்றே பொருட்கள்தான் தேவை. அரிசி வடித்த கஞ்சி – 1/2 கப், செம்பருத்தி பூ இலை – 7, மரச்செக்கு தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன். செம்பருத்தி பூ இலைகளை எடுத்து நன்றாக தண்ணீரில் கழுவி சிறிய சிறிய துண்டுகளாக கிழித்து வைத்துக் கொள்ளுங்கள். (தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் இப்படி வேறு எண்ணெயை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.)
சாதத்தை வடித்த கஞ்சி நமக்கு தேவை. உங்களுடைய வீட்டில் கைக்குத்தல் அரிசி, சிகப்பு அரிசி இப்படி ஆர்கானிக்கான சுத்தமான அரிசி இருந்தால் அந்த அரிசியை வடித்து கஞ்சி தயார் செய்து கொள்வது மிகவும் சிறப்பு. அப்படி இல்லை என்றால் சாதாரணமாக நீங்கள் சாப்பிட பயன்படுத்தும் அரிசியை வடித்து கஞ்சி எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் செம்பருத்தி இலைகள், அரிசி கஞ்சி, தேங்காய் எண்ணெய் ஊற்றி, எல்லாவற்றையும் நன்றாக கலந்து அடுப்பில் வைத்து 5 லிருந்து 7 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அரிசி வடித்த கஞ்சி ரொம்பவும் திக்காக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். தவறு கிடையாது.
இந்த தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இதை அப்படியே வடிகட்டி நன்றாக ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்தால் 7 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இதை எப்போது வேண்டுமென்றாலும் உங்களுடைய தலையில் நீங்கள் அப்ளை செய்து கொள்ளலாம். கொஞ்சமாக இந்த லிக்விடை எடுத்து ஒரு காட்டன் பஞ்சில் தொட்டு உங்களுடைய ஸ்கேல்பில் மயிர் கால்களில் நன்றாக படும்படி வைத்து விடுங்கள். பிறகு கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தேய்ப்பது போல கையில் எடுத்து தடவி முடியின் நுனி வரை கூட இந்த லிக்விடை அப்ளை செய்து கொள்ளலாம்.
இரவு நேரம் முழுவதும் இந்த பேக் உங்களுடைய தலையிலேயே இருக்கலாம். சளி தொந்தரவு தலைபாரம் தொந்தரவு வருவதற்கு வாய்ப்பு கிடையாது. மறுநாள் காலை எழுந்து எப்போதும் போல ஷாம்பு அல்லது சீகைக்காய் போட்டு தலைக்கு குளித்து விடுங்கள்.
இரவு முழுவதும் உங்களுக்கு தலையில் இந்த பேக்கை வைக்க பிடிக்கவில்லை என்றாலும் தலைக்கு குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தலையில் வைத்து ஊறவிட்டு பிறகு குளித்துக் கொள்ளலாம். தொடர்ந்து இந்த குறிப்பை பின்பற்றி வர உங்களுடைய முடியின் வலிமை அதிகரித்துக் கொண்டே செல்லும். நீங்க ட்ரை பண்ணி பாருங்க.