இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மாவிலை பொடி.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மாவிலை பொடி... எப்படி எடுக்கணும்.... வேற என்னலாம் சாப்பிடலாம்...

சுகர் வந்த பிறகு அதை குணப்படுத்த முடியாது. ஆனால் கண்டிப்பாக கட்டுக்குள் வைக்கலாம். அதற்கு மருந்துகளோடு வாழ்க்கை முறையும் உணவு முறையும் உதவும். ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் இந்த உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஆயுர்வேதத்தில் நீரிழிவு என்பது வளர்சிதை மாற்ற நோய் ஆக பார்க்கப்படுகிறது.

ஒரு நபருக்கு அதிக இரத்த சர்க்கரை உள்ளது. உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாததால் அல்லது இன்சுலின் உற்பத்தி செய்த பிறகும் உடல் அதை பயன்படுத்தி கொள்ளாத நிலை இருந்தால் நீரிழிவு உண்டாகும். இதில் இன்சுலின் என்பது கணையத்தால் சுரக்கும் ஒரு ஹார்மோன் என்று சொல்லலாம். இது செல்களால் சர்க்கரையை உறிஞ்சுவதற்கு உதவுகிறது நீரிழிவு நோயின் பொதுவான வகைகள்

டைப் 1 வகை நீரிழிவு: இந்த வகை நீரிழிவு உடல் இன்சுலினை உற்பத்தி செய்யத் தவறிவிடுவதால் நோயாளி தனது உடலில் இன்சுலின் செலுத்தி கொள்ள வேண்டிய நிலை ஆகும்.

டைப் 2 நீரிழிவு:  இந்த வகை இன்சுலின் எதிர்ப்பின் விளைவு ஆகும். அதாவது செல்கள் இன்சுலினை சரியான முறையில் பயன்படுத்த தவறிய நிலை.

காரணங்கள் :

டைப் 1 நீரிழிவு நோய் பரம்பரையாகவும் சில நோய்த்தொற்றுகளாலும் தூண்டப்படுகிறது.

டைப் 2 நீரிழிவு நோய் தவறான மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் மரபணு காரணிகளால் உண்டாகிறது.

அறிகுறிகள் :

அதிகரிக்கும் பசி
அதிகரிக்கும் சிறுநீர்
அதிகரிக்கும் தாகம்
சோர்வு போன்றவற்றை சொல்லலாம்.

நீரிழிவுக்கு உதவும் வீட்டு வைத்தியம் :

பாகற்காய் :

பாகற்காய் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து இந்த காய்கறியை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். ஒரு டீஸ்பூன் பாகற்காய் சாற்றை தொடர்ந்து உட்கொள்வது இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

துளசி :

துளசி வேப்ப இலை (கொழுந்தாக கூட இருக்கலாம்) -தலா 10 இலைகளை எடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு மாதங்கள் இதை பயிற்சி செய்து இடையில் இரத்த சர்க்கரை அளவை தவறாமல் சரிபார்க்கவும்.

வெந்தயம் :

இரவு இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் காலை வெந்தயத்தை சாப்பிட்டு பிறகு அவை ஊறிய தண்ணீர் குடிக்கவும். அடுத்த ஒரு மணி நேரம் வரை எதையும் சாப்பிட வேண்டும். சர்க்கரை கட்டுக்குள் இல்லாத நிலையில் மூன்று மாதங்கள் இதை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் பலன் கிட்டும்.

வெந்தய விதைகளில் ட்ரைகோனெலின் நிகோடினிக் அமிலம் மற்றும் கூமரின் ஆகிய அல்கலாய்டு உள்ளது. இந்த மருந்து ட்ரைகிளிசரைடு மற்றும் கொழுப்பு அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

வெங்காயம் :

தினமும் சிறிய அளவில் வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவது சர்க்கரை நிலையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நெல்லி பாகற்காய் ஜூஸ் :

நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் பாகற்காய் சாறு சேர்த்து குடிக்கலாம். அல்லது நெல்லிக்காயை அப்படியே மென்று சாப்பிடலாம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

நித்திய கல்யாணி :

இது பிரபலமான வைத்தியம். நித்திய கல்யாணி செடியின் இலைகளை துளசி இலைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

ஆலமரம் :

ஆலமரத்தின் பட்டை மற்றும் அதன் வேர் தண்டுகளை உலர்த்தி வைக்கவும். இதன் பட்டையின் சில துண்டுகள் மற்றும் வேர்களை சேர்த்து ஊறவிடவும். மறுநாள் அந்த தண்னீரில் ஊறவைத்த துண்டுகளை இடித்து வடிகட்டி நீரை குடிக்கவும்

நாவல் பழம் :

நாவல் பழங்கள் அதன் விதைகள் இரண்டுமே நீரிழிவுக்கு சிறந்தது. இதன் கொட்டைகளை உலர்த்தி பொடித்து சேமித்து வைக்கலாம். தினமும் ஒரு டீஸ்பூன் அளவு பொடியை தண்ணீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடவும். தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

மாவிலை :

மாவிலைகளை சேகரித்து, உலர்த்தி (நிழலில்) பொடி செய்து சேமிக்கவும். இந்த பொடியை தினமும் அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் சர்க்க்கரை நோய் கட்டுப்படும்.

உணவில் தவிர்க்க வேண்டியவை :

உங்கள் உணவில் வெள்ளை சர்க்கரை, இனிப்புகள் சாக்லேட், குளிர்பானங்கள், ஆல்கஹால் மற்று பேக்கரி பொருள்கள் தவிர்ப்பது நல்லது.

அரிசி உணவை தவிர்க்க வேண்டும். அல்லது குறைக்க வேண்டும்.

இவையெல்லாம் தாண்டி வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை போன்றவற்றையும் கவனமாக கடைப்பிடித்து உடற்பயிற்சியையும் கடைப்பிடித்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்