மலச்சிக்கல் பிரச்சினையா? இதனை எளியமுறையில் போக்க இதோ சில எளிய டிப்ஸ்...

மலச்சிக்கல் பிரச்சினையா? இதனை எளியமுறையில் போக்க இதோ சில எளிய டிப்ஸ்...

பொதுவாக மலச்சிக்கலானது நம்மில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய மிகவும் பொதுவான ஒன்றாகும்.

   மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கத்தால் பெரும்பாலான மக்கள் இந்த வகையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

அந்தவகையில் மலச்சிக்கல், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை சரி செய்யக்கூடிய ஒரு சில எளிய வழிகளை இங்கே பார்ப்போம்.

• மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் தினசரி காலை உணவில் பப்பாளி சேர்த்துக் கொள்ள வேண்டும். பப்பாளியில் பப்பைன் என்ற என்ஜைம் இருக்கிறது. அது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு தரும். 

• 5 முதல் 10 கருப்பு திராட்சைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலை அல்லது மாலை வேளையில் சாப்பிட வேண்டும். இதை செய்வதால் உங்களுக்கு மலம் இலகுவாக வெளியேறும் என்பதோடு, தூக்கத்தை மேம்படுத்தவும் உதவிகரமாக அமையும். 

• இரவில் உணவு சாப்பிடும் முன்பாக, காய்கறி சூப் எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் மலக்குடலை சுத்தம் செய்ய உதவிகரமாக இருக்கும். காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வயிற்றில் வாயு உண்டாகுவதற்கு அது காரணமாக அமைந்து விடும்.

• தினசரி இரவு தூங்குவதற்கு முன்பாக இரண்டு ஸ்பூன் பசு நெய் சேர்த்து, வெது வெதுப்பான பால் அருந்த வேண்டும். இது நமது குடல் பகுதியில் இலகுத் தன்மையை அதிகரிக்கும். காலையில் மலக்குடலை சுத்தம் செய்து விடும்.

• நாம் உண்ணும் உணவில் புரதம், மாவுச்சத்து போன்றவை ஏராளமாக இருக்கின்றன. ஆனால், உடலில் நார்ச்சத்து குறைவதாலும் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் காய்கறி உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக, வாழைப்பழம் சாப்பிடுவது, வெந்தய தண்ணீர் பருகுவது போன்ற நடவடிக்கைகளை கடைப்பிடிக்கலாம்.