தலைமுடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொடுகு 1 மணி நேரத்தில் காணாமல் போக சூப்பர் ஹேர்ஸ்பிரே!!
தலைமுடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொடுகு 1 மணி நேரத்தில் காணாமல் போக சூப்பர் ஹேர்ஸ்பிரே!!
நம்முடைய முடி உதிர்வுக்கு முதல் காரணமாக இருப்பது இந்த பொடுகு பிரச்சினை தான். சில பேருக்கு பொடுகு பிரச்சினையோடு சேர்த்து பேன் தொல்லையும் இருக்கும். விரலை வைத்து தலையை இலேசாக சுரண்டினால் போதும். அப்படியே பொடுகு கொட்டத் தொடங்கும். சிலபேர் பொடுகை விரல்களால் சுரண்டி எடுத்து எடுத்து தலையை புண்ணாக்கி வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு பொடுகு பிரச்சினை இருந்தால் கூட, அதை உடனடியாக சரி செய்ய ஒரு ரிமெடி உங்களுக்காக. பொடுகுத் தொல்லையை நீக்கும் வேப்பிலை ஹேர் ஸ்பிரே எப்படி தயார் செய்வது.
முடிந்தவரை பின் சொல்லக் கூடிய எந்தப் பொருளையும் ஸ்கிப் பண்ணாம ஹேர் ஸ்பிரே வை தயார் செய்து தலையில் போட்டால் ஒரு முறை இந்த ஸ்பிரேவை பயன்படுத்தும்போது, நல்ல வித்தியாசம் தெரியும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ள வேண்டும். அதில் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை சிறிய சிறிய துண்டாக வெட்டி அல்லது இடித்து அந்த தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். வேப்பிலை கசப்பு தன்மை அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கும். 1 டம்ளர் தண்ணீர், 1/2 டம்ளர் ஆகும் வரை தண்ணீரை கொதிக்க வையுங்கள்.
வேப்பிலை நன்றாக தண்ணீரில் கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, இந்த தண்ணீரை வடிகட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். 1/2 கப் அளவு வேப்பிலை தண்ணீர் எடுத்துக் கொண்டால், அதை 1/2 கப் அளவு ஆப்பிள் சீடர் வினிகர் நமக்கு தேவைப்படும். இந்த இரண்டு லிக்விடையும் ஒன்றாக கலந்து கொள்ளவேண்டும். இறுதியாக இதில் tea tree essential oil for hair 3 அல்லது 4 சொட்டுகள் விட்டு நன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொண்டால் நமக்கு தேவையான ஸ்பிரே தயார்.
வேப்பிலை தண்ணீர், ஆப்பிள் சீடர் வினிகர், tea tree essential oil, இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்தால் ஸ்பிரே தயாராகிவிட்டது. இந்த ஸ்பிரேவை பிரிட்ஜ் இல்லாமலேயே 5 லிருந்து 6 நாட்கள் பயன்படுத்தலாம். உங்களுடைய தலையில் வேர்கால்களில் இந்த ஸ்பிரே நன்றாகப் படும்படி ஸ்ப்ரே செய்துவிட்டு அதன் பின்பு லேசாக மசாஜ் செய்து 1 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலையை அலசிக் கொள்ளலாம்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாட்கள் இந்த ஸ்பிரேவை பயன்படுத்தி வரும் போது உங்களுக்கு நிச்சயமாக நல்ல வித்தியாசம் தெரியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த ஒரு பயமும் இல்லாமல் இந்த ஹேர்ஸ்பிரே பயன்படுத்தலாம். ஸ்கூலுக்கு போகும் பெண் பிள்ளைகளுக்கு அதிகமாக பொடுகு பேன் தொந்தரவு இருக்கும். அவர்களுக்கு இந்த குறிப்பை ட்ரை பண்ணி பாருங்க.
உங்களுக்கு வேப்ப இலைகள் மரத்திலிருந்து பிரஷ்ஷாக கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நாட்டு மருந்து கடைகளில் விற்கும் வேப்பம் பொடியை வாங்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த தண்ணீரை கூட இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் ட்ரை பண்ணி பாருங்க. நீண்டநாள் பொடுகு தொல்லையில் இருந்து சீக்கிரம் விடுபடுவீர்கள்.