கடுமையான இரத்த சோகையை குணப்படுத்தும் முருங்கை இலை! வேறு என்னலாம் சாப்பிடலாம்!!

கடுமையான இரத்த சோகையை குணப்படுத்தும் முருங்கை இலை! வேறு என்னலாம் சாப்பிடலாம்!!

இரும்புச்சத்து குறைபாட்டால் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. இது குழந்தைகள் ஆண்களை காட்டிலும் பெண்களை அதிகமாகவே தாக்குகிறது. இந்த இரத்த சோகை பிரச்சனைக்கு உதவும் வீட்டு வைத்தியம் என்ன என்பதை பார்க்கலாம்.

இரத்த சோகை என்றால் என்ன?

இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அல்லது ஹீமோகுளொபின் அளவுகள் சாதாரண நிலைக்கு கீழ் குறையும் நிலை இரத்த சோகை என்றழைக்கப்படுகிறது.

சிவப்பு இரத்த அணுக்கள் உங்கள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவுகிறது. இரத்த சிவப்பணுகளில் இரும்புச்சத்து நிறைந்த புரதமான ஹீமோகுளோபின் இரத்த அணுக்களுக்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. இது தான் ஆக்ஸிஜனை மற்ற உறுப்புகளுக்கு எடுத்து செல்லவும் உதவுகிறது. தொற்றுநோயை எதிர்த்து போராடவும், இரத்ஹ்ட உறைதலை தூண்டுவதால் இரத்த இழப்பு தடுக்கவும் இவை அத்தியாவசியம் ஆகும்.

இரத்த சோகை குறைபாடு அறிகுறிகள் :

சோர்வு

பலவீனம்

வெளிறிய தோல்

மூச்சுத்திணறல்

கை கால்களில் குளிர்ச்சி

தலைவலி

மயக்கம்

முடி உதிர்வு

ஒழுங்கற்ற இதயத்துடிப்பு

சகிப்புத்தன்மை

கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம். அதனுடன் இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு உதவும்.

முருங்கை இலை :

தேவை :

முருங்கை இலைகள் - 1 கைப்பிடி
தேன் - 1 டீஸ்பூன்

இலைகளை நறுக்கி அதை பிழிந்து சாறு எடுக்கவும் இதனுடன் தேன் கலந்து விடவும். காலை உணவுடன் இதை உட்கொள்ளவும்.

இது ஏன் வேலை செய்கிறது?

முருங்கையில் வைட்டமின்கள் ஏ, சி இரும்புச்சத்து , கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இது இரத்த சோகையை குணப்படுத்த உதவும்.

கர்ப்பிணிகள் கீரையாக எடுக்கலாம். ஆனால் சாறாக்கி எடுப்பதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் :

தேவை :

முட்டைகள் - 2
வேகவைத்த பீன்ஸ் - அரை கப்
கீரை - 1 கப்
ப்ரக்கோலி - கால் கப்
உப்பு - தேவைக்கு

முட்டைகளை உடைத்து உப்பு தூவி அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறுங்கள். முட்டைகளை தட்டில் விட்டு பரிமாறு அதில் வேகவைத்த பீன்ஸ், வேகவைத்த ப்ரக்கோலி சேர்க்கவும். இதை காலை உணவாக உட்கொள்ளவும்.

இது எப்படி வேலை செய்கிறது?

உயிரணு செயல்பாடு மற்றும் உயிர்வாழ்வதில் வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைட்டமின் குறைபாடு இரத்த சோகை உட்பட கடுமையான நோய்களை உண்டாக்கலாம்.

கீரைகள், முட்டை மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை எடுப்பது வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலேட் குறைபாட்டை தடுக்கிறது. இதனுடன் மருத்துவர் பரிந்துரைக்கும் வைட்டமின் பி12 சப்லிமெண்ட்களையும் எடுக்கலாம்.

வைட்டமின் சி :

தேவை :

திராட்சைப்பழம் - கால் கப்,
கிவி - 1
ஆப்பிள் - கால் கப்
தேன் -1 டீஸ்பூன்
இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்

திராட்சைப்பழத்தை மசிக்கவும். கிவியை தோலுடன் நறுக்கி ப்ளெண்டரில் சேர்க்கவும்.ஆப்பிளையும் நறுக்கி சேர்க்கவும். இதனுடன் இஞ்சி மற்றும் தேன் கலந்து சேர்க்கவும் அனைத்தையும் நன்றாக கலக்கி ஒரு டம்ளரில் ஊற்றீ குடிக்கவும்.

காலை உணவு அல்லது மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுக்கவும்.

இது எப்படி வேலை செய்கிறது?

வைட்டமின் சி பெரும்பாலும் சிட்ரஸ் பழங்களில் காணப்படுகிறது. ஆரஞ்சு, ஆப்பிள், எலுமிச்சை, க்ரேப் ஃப்ரூட், நெல்லிக்காய், ஆப்பிள் மற்றும் பெர்ரி போன்ற பழங்களில் வைட்டமின் சி உள்ளது. இது இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவும்.

இந்த பானம் வைட்டமின் சி நல்ல மூலமாகும். இது உடலில் ஹீமோகுளோபின் அளவையும் இரும்பு உறிஞ்சுதலையும் புதுப்பிக்க உதவும்.

வைட்டமின் சி உடலில் உறிஞ்சுவதை தடுக்கும் பால் அல்லது பால் சார்ந்த பொருள்களுக்கு பிறகு இதை எடுக்க கூடாது. அளவாக எடுக்கவும்.

புரோபயாட்டிக் :

தயிர் - அரை கப்
தண்ணீர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலைகள் - அரை கைப்பிடி நறுக்கியது
உப்பு - 1 சிட்டிகை
சீரகப்பொடி - 1 சிட்டிகை

தயிரை அடித்து அதனுடன் தண்ணீர் உப்பு, எலுமிச்சை சாறு, நறுக்கிய கொத்துமல்லி இலைகள் மற்றும் சீரகப்பொடி கலந்து சேர்க்கவும் நன்றாக கிளறி விட்டு குடிக்கௌம். இதை மதிய உணவுக்கு முன்பு அல்லது பின்பு குடிக்கலாம்.

இது எப்படி வேலை செய்கிறது?

புரோபயாடிக்குகள் செரிமானம் மற்றும் குடல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. புரோபயாடிக் நிறைந்த உணவுகளில் நல்ல குடல் பாக்டீரியாக்கள் இருப்பதால் புரோப்யாடிக்குகள் வைட்டமின் பி12 மற்றும் இரும்பு அளவை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இரத்த சோகை உள்ள நோயாளிகள் தயிர் சாப்பிடுவதன் மூலம் குறைந்த இரத்த சிவப்பணு எண்ணிக்கை மற்றும் ஹிமோகுளோபின் அளவை மேம்படுத்தலாம். இது புரோபயாடிக்குகளின் நல்ல ஆதாரம். தயிராகவோ அல்லது மோராகவோ குடிக்கலாம்.

அத்திப்பழம் :

பழுத்த அத்திப்பழங்கள் - 4
தண்ணீர் - 1 கப்

அத்திப்பழத்தை 1 கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் காலை நான்காக நறுக்கி அப்படியே சாப்பிடவும்.

இது எப்படி வேலை செய்கிறது?

பருமனான மற்றும் இனிப்பு அத்திப்பழங்கள் இரும்புடன் ஏற்றப்படுகின்றன. அவை வைட்டமின் ஏ, ஃபொலேட் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் நல்ல ஆதாரங்களாகும். அத்திப்பழங்களை ஊறவைப்பதால் அவை விரைவில் ஜீரணமாகும்.

இதை அதிகமாக எடுக்க கூடாது. செரிமான பிரச்சனை உண்டு செய்யலாம். கர்ப்பிணிகள் அத்திப்பழம் எடுக்கும் முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது.

பீட்ரூட் :

பீட்ரூட் - 1
எலுமிச்சை - பாதி

பீட்ரூட்டை தோலுரித்து நறுக்கி அதை சாறு பிழியவும். இந்த கலவையில் எலுமிச்சை பிழிந்து நன்றாக கலந்து குடிக்கவும். இதை காலை உணவுக்கு பிறகு அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு குடியுங்கள்.

இது எப்படி வேலை செய்கிறது?

இரும்பு, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் சிறந்த ஆதாரங்களில் பீட்ரூட் ஒன்று. ஆய்வில் இளம்பெண்களுக்கு பீட்ரூட் ஜூஸ் கொடுத்த 20 நாட்களில் ஹீமோகுளோபின் அளவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தது கண்டறியப்பட்டது. இதில் எலுமிச்சை சேர்ப்பதால் வைட்டமின் சி அளவு அதிகரிக்கிறது.

வாழைப்பழங்கள்  :

தேவை ::

பழுத்த வாழைப்பழங்கள் - 1
தேன் - 1 டீஸ்பூன்

வாழைப்பழங்களை கழுவி தோலுரித்து நறுக்கவும். இதை காலை உணவாக அதன் மேல் தேன் ஊற்றி எடுக்கவும்.

எப்படி வேலை செய்கிறது?

பச்சை அல்லது பழுத்த வாழைப் பழங்களை உட்கொள்வதன் மூலம் இரும்பு அளவை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தலாம். இதில் இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளன. இது ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதற்கும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துவதற்கும் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உங்கள் உடலுக்கு அளிக்கும்.

அதிக கலோரிகள் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் அதிகமாக எடுப்பது எடை அதிகரிப்பை உண்டாக்கும்.

பேரீச்சம்பழம் மற்றும் உலர் திராட்சை :

பேரீச்சம்பழம் - 4
திராட்சைகள் - 10

பேரீச்சம்பழம் மற்றும் திராட்சையை ஒரு பாத்திரத்தில் தண்ணீரி 20-30 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு தண்ணீரை வடிகட்டி குடிக்கவும். திராட்சை மற்றும் பேரீச்சையை காலை உணவில் மிருதுவாக்கிகள், சாலட்கள் அல்லது இனிப்புகளில் சேர்த்து சாப்பிடுங்கள்.

இது எப்படி வேலை செய்கிறது?

பேரீச்சம்பழம் மற்றும் திராட்சைகள் இரும்பு மற்றும் வைட்டமின் சி நல்ல ஆதாரங்கள். வைட்டமின் சி உடலில் நொய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் இரும்பு உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது.

கருப்பு எள் விதைகள் :

கருப்பு எள் விதைகள் 1-2 டீஸ்பூன்
தண்ணீர் - கால் கப்
தேன் - 1 டீஸ்பூன்

கருப்பு எள்ளை 3 மணீ நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி எள் விதைகளை கெட்டியான பேஸ்ட்டாக உருவாக்கவும். கருப்பு எள் விழுதை தேனுடன் கலந்து எடுக்கவும். தினமும் காலை உணவுக்கு பிறகு இதை எடுக்கலாம்.

எப்படி வேலை செய்கிறது

கருப்பு எள் விதைகளில் ஃபோலேட், இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. மற்றும் இரத்த சோகை இருந்தால் அவை இரும்பு அளவை அதிகரிக்கின்றன. உடல் இரும்பை உறிஞ்சவும் உதவுகின்றன.

உங்கள் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்த நீங்கள் இந்த உணவுகளை முயற்சி செய்யலாம். இதனோடு உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க வாழைப்பழம், பீட்ரூட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கீரைகள், பருப்புகள், புரத உணவுகள் சேர்ப்பது அவசியம்.