வெள்ளை விஷம் ...பால்...
வெள்ளை விஷம் ...பால்...
நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..
ரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்..
" முன்பெல்லாம் ஒரு தெருவிலே நிறைய வீடுகளில் பசு இருக்கும். மேய்ச்சலுக்கு ஆள் வரும். எருமைகளும் நிறைய ... பசும்பாலுடன் எருமை பாலை கலந்து விற்பது சாதாரணமாக நடக்க கூடியது. கூடிப் போனா தண்ணீர் கலப்பார்கள்..
மக்கள் தொகை குறைவாக இருந்த அந்த காலங்களில் கூட காலை, மாலை இரு வேளைகளில் தான் பால் கிடைக்கும். ஏதாவது கல்யாணம் காட்சி என்றால் .. முன்பே சொல்லி வைக்க வேண்டும். சில வேளைகளில் பாலுக்கான Demand மிக அதிகமாக இருக்கும்.. குழந்தைக்கு பால் கிடைக்கவில்லை என்றால் நிறைய பால் பௌடர்கள் புழக்கத்தில் இருந்தன..
ஆனால் இப்போ நிலைமை வேறு.. எல்லா இடமும் அபார்ட்மெண்ட் வீடுகள் .. மேய்ச்சல் நிலம் எல்லாம் கான்க்ரீட் மயம்..விவசாய குடும்பங்களே மாடு வளர்ப்பதில்லை... என்னதான் வெண்மை புரட்சி , ஜெர்ஸி பசுக்கள், முர்ரா எருமைகள் என்றாலும் இப்போதுள்ள மக்கள் தொகைக்கு 24 X 7 பால் பாக்கெட் கிடைக்கிறது என்றால் logic இடிக்குதே.. கண்ணு போட்டா தானே மாடு பால் தரும். அவ்வளவு கண்ணு இருந்தா மாடுகள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கணுமே ... எப்படிங்க இவ்வளவு பால் கிடைக்குது ???
"" தம்பி.. நீங்க எந்த உலகத்திலே இருக்கீங்க.. எல்லாம் 20:50:30 தான்.."
"அப்படின்னா "
" 20 % தாங்க மாட்டு பால்.. 50% சோயா பால், மிச்சம் தண்ணி தான்.. நம்மூர்ல கூட சோயா பால் factory இருக்குதே .. தெரியாதா??.. இருக்குற மாடுகளை வச்சிட்டு மாட்டு பால் மட்டும் கொடுத்தா ஆளுக்கு ஒரு ஸ்பூன் பால் கூட கிடைக்காது.. நம்ம ஊர்ல இருந்து தினசரி 80000 லிட்டர் பால் சென்னைக்கு வேற அனுப்பனும்.. சொசைட்டி உத்தரவு.. எப்படி முடியும்??"
எந்த தண்ணிய ஊத்துவீங்க ...
ஹி .. ஹி .. ஊருணி, குளம் , கம்மா தண்ணி தான்.. பின்ன Aquafina வாங்கியா ஊத்த முடியும்..
இல்ல.. பால் சொசைட்டில இந்த லாக்டோமீட்டர் எல்லாம் வச்சு பாக்க மாட்டாங்க ??
பாப்பாங்க ..
அப்புறம்
பாப்பாங்க .. அவ்வளவு தான் தம்பி.. லாக்டோமீட்டர்லாம் பழசு.. வேற என்னென்னமோ டெஸ்ட் எல்லாம் பண்ராங்க இப்ப....
சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??
அப்படி சொல்ல முடியாது..
அதெல்லாம் ratio கொஞ்சம் வித்தியாசப்படும் . அவ்வளவு தான்.. ஆனா மாட்டு பால் 20% - 30% தான் தம்பி.. அது போக detergent, ஸ்டார்ச், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா.. இன்னும் என்னன்னவோ ..
சின்ன புள்ளைங்க இந்த பாலை குடிச்சு ... யோவ் .. சோயாக்கே நிறைய side effects இருக்குய்யா .. கொஞ்சம் கூடுச்சின்னா ஆஸ்த்மா .. அலர்ஜி .. Erectile dysfunction, ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு ஹார்மோன் imbalance ..
அதுக்கு ...??
அப்புறம் நாங்க சுத்தமான பசும் பால் சாப்பிடணும்னா ??
நீங்க தான் பசு மாடு வளர்க்கணும்..
சரி.. இதுக்கே இப்படி சொல்றீங்களே..
வெள்ளி செவ்வாய்க்கு கடை வாசல்கள்ல உடைக்கிற தேங்காய்களை அள்ளி ஹோட்டல்களுக்கு தர்ற கான்ட்ராக்ட் .,
பெரிய ஹோட்டல்கள்ல ஓரு தடவை பூரி சுட்ட எண்ணெய் வாங்கி ரோட்டு கடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட், கோழி கடைகள்ல மிச்சமாகிற தலை, குடல் வாங்கி சால்னா கடைகளுக்கு கொடுக்குற கான்ட்ராக்ட் , கிராமங்கள்ல நோய்வாய் பட்ட ஆடுகளை சல்லிசா வாங்கி கறிகடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட் ... இப்படி நிறைய இருக்கு தம்பி.. முன்னாடில்லாம் ஊர்ல ஒருத்தன் ரெண்டு பேருக்கு கேன்சர் வரும்.. இப்போ ஒவ்வொரு பெரிய ஆசுபத்திரிலேயும் போய் பாருங்க ..
பலரும் அறிய செய்யுங்கள்