சீமை அகத்தி செடியின் மருத்துவ குணங்களும் அற்புத பலன்களும் !!

சீமை அகத்தி செடியின் மருத்துவ குணங்களும் அற்புத பலன்களும் !!

சீமைஅகத்திச் செடியின் இலைகள்
அதிகமாக மருத்துவத்திற்குப்
பயன்படுகிறது. தோல் வியாதிகளைக்
குணப்படுத்துகின்றது.

வண்டுகடி, படர்தாமரை, சொறிசிறங்கு, கற்பப்பை கோளாறுகள் பாக்டீரியா, பூஞ்சைகளை அளிக்கவும், இரத்த அழுத்தம் குறைவதையும் குணப்படுத்தவும், வயிற்றுவலி, காய்ச்சல், ஆஸ்த்துமா, அல்சர், பாம்புக்கடி, சிறுநீர் எழிதாகக்கழிய, நுரையீரல் நோய்கள், இரத்த சோகை, மாதவிடாய் சம்பந்தமான நோய்கள்,
போன்றவைகளையும் குணப்படுத்தும்.

இதன் இலையில் தடுப்பு சக்தி இருப்பதால் சோப்பு, ஷாம்பு, முகப்பூச்சாகவும் பிலிப்பெயின்சில் பயன்படுத்துகிறார்கள்.

வண்டு கடியைக் குணப்படுத்த குறிப்பிட்ட அளவு புதிதாகப் பச்சையாக உள்ள இலையை பறித்து எலுமிச்சைசாறுடன் சேர்த்து நன்கு அரைத்து வண்டு கடி மீது காலை, மாலை தடவினால் விரைவில் குணமடையும். இதன் மஞ்சள் பூக்களைப் பறித்து முறைப்படி கசாயம் வைத்துக் கொடுக்க சிறுநீர் கோளாறுகள் நீங்கி தடையின்றி வெளியேறும்.

சீமை அகத்தி பட்டையை எடுத்து முறைப்படி ஊறவைத்து கசாயமாகக் காய்ச்சி வடிகட்டி தினம் காலை, மாலை இரண்டு வேளை உட்கொண்டால் வலியைப் போக்கும், மலக் கழிவு இலகுவாக வெளியேறும்.

படர் தாமரையைப் போக்க உடனே பறித்த சீமை அகத்தி இலைகள் அறைத்து அதற்கு சமஅளவு தேங்காய் எண்ணெய்யில் சேர்த்துத் தினந்தோறும் இரண்டு முறை அழுத்தித் தேய்க்க குணமடையும்.