தேங்காய் டீ பற்றி உங்களுக்கு தெரியுமா?

தேங்காய் டீ பற்றி உங்களுக்கு தெரியுமா? 

நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் நாம் உட்கொள்ளக் கூட ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும்.

இது ஏராளமான சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது தேங்காயில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன.

இது தவிர, அதில் லாரிக் அமிலம், வைட்டமின் சி, மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளன.

இச்சத்துக்கள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களாகும். இதில் டீ போட்டு குடிப்பதனால் கூட பல நன்மைகள் நம்மை வந்து சேரும். 

அந்தவகையில் தற்போது தேங்காய் டீ குடிப்பதால் பெறும் நன்மைகளையும், அதை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையானவை :

தண்ணீர் - 4 கப்
க்ரீன் டீ - 3பேக்
தேங்காய் பால் - 1/2 கப்
பனங்கற்கண்டு - டீஸ்பூன்

தயாரிப்பது எப்படி?

தேங்காய் டீ தயாரிப்பதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.  

பின் அதில் 3 க்ரீன் டீ பேக்கை சேர்க்க வேண்டும்.  

பின்பு அதில் 1/2 கப் தேங்காய் பால் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் க்ரீம் சேர்த்து நன்கு கலந்து, க்ரீன் டீ பேக்குகளை நீக்கிவிட வேண்டும். 

 விருப்பமுள்ளவர்கள், இந்த டீயுடன் ஒரு டீஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.  

நன்மைகள் :

  தேங்காய் இயற்கையாகவே சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். ஏனெனில் இது ஆரோக்கியமான கொழுப்புக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகளவில் உள்ளன. 

தேங்காய் டீயை குடித்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும். ஏனெனில் தேங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த தேங்காய் டீ பெரிதும் உதவும்.

 எடையை குறைக்க தேங்காய் டீ குடியுங்கள். இது உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து கொழுப்பைக் குறைக்கும் செயல்முறையை வேகப்படுத்தும்.

தேங்காயில் நல்ல கொழுப்புக்கள் மற்றும் லாரிக் அமிலம் அதிகம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாக்க உதவும்.

குறிப்பு :

தேங்காய் டீயை ஒருவர் அளவுக்கு அதிகமாக குடித்தால், அது செரிமான பிரச்சினைகளை உண்டாக்கும்.

 கர்ப்பிணிப் பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தேங்காய் டீ அதிகம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.