40 வயதுக்கு மேல் ஏற்படும் கொழுப்பு கல்லீரலை சரிசெய்யும் 4 எளிய வழிகள் என்னென்ன...

40 வயதுக்கு மேல் ஏற்படும் கொழுப்பு கல்லீரலை சரிசெய்யும் 4 எளிய வழிகள் என்னென்ன...

ஆரோக்கியமான கல்லீரல் நம்முடைய வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கிறது. மென்ஷியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதுவே கல்லீரலில் கொழுப்பு தேங்கும்போது இந்த செயல்பாடுகள் எல்லாமே சிதைவடைகின்றன.

கொழுப்பு கல்லீரல், இரண்டு வகைகளில் உண்டாகிறது.

1. மதுவால் ஏற்படும் கல்லீரல் கொழுப்பு

2. மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் கல்லீரல் கொழுப்பு

ஆல்கஹால் எடுத்துக் கொள்ளாதோருக்கு ஏற்படும் கல்லீரல் கொழுப்பு பிரச்சினையால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் தீவிர அறிகுறிகள் தோன்றாத வரை எளிதில் கண்டறிய முடிவதில்லை.

அதிலும் குறிப்பாக, 40 வயதைக் கடந்த பெண்களில் கிட்டதட்ட 80 சதவீதம் பேர் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

முட்டை :

முட்டை முழுக்க முழுக்க புரதத்தால் ஆனது. அதனால் நம்முடைய அன்றாட புரதத் தேவையைப் பூர்த்தி செய்ய தினசரி உணவில் முட்டை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

கொலஸ்டிரால் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறவர்கள் மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு தீமையை உண்டாக்கும் என்று நினைத்து வெறும் வெள்ளை கரு மட்டும் உட்கொள்வதுண்டு. ஆனால் முட்டையில் கோலின் சத்து மிக அதிகமாக இருக்கிறது.

கல்லீரலில் தேங்கும் கொழுப்பை உடைப்பதற்கு நம்முடைய கல்லீரல், கோலினை தான் பயன்படுத்துகிறது.

நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கொழுப்பு கல்லீரல் உள்ள பெண்களில் 80 சதவீதம் பேர் கோலின் அதிகம் உள்ள காலிஃபிளவர் மற்றும் முட்டை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கி, 30 நாட்களுக்குள் அவர்களுடைய கொழுப்பு கல்லீரல் பிரச்சினையில் தலைகீழ் மாற்றம் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

வான்கோழி, கோழி, மாட்டிறைச்சி மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றில் கோலின் அதிக அளவில் இருக்கிறது. தினசரி உணவில் வெறும் 500 மில்லிகிராம் அளவுக்கு கோலின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலே மிகப்பெரிய மாற்றத்தை அடைய முடியும்.

​காபி :

காஃபைன் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லதில்லை தான். அது கல்லீரல் செயலிழப்பை கூட ஏற்படுத்தலாம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அளவோடு காபி எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு நல்லது என்றும், அது கல்லீரலில் தேங்கும் கொழுப்பை கரைக்க உதவி செய்கிறது என்றும் ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஆனால் பிளாக் காபி தான் எடுத்துக் கொள்ள வேண்டுமேயொழிய பால், சர்க்கரை சேர்க்கக் கூடாது. சுவையைக் கூட்ட நினைத்தால் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

ஜப்பானிய ஆய்வுகள் தினமும் இரண்டு கப் பருகுவதால் கொழுப்பு கல்லீரல் பாதிப்பு 78 சதவீதம் குறைவதாகவும் காபியில் உள்ள காஃபைன் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் கல்லீரலில் கொழுப்பைக் குவிக்கும் செல்லுலார் சேதத்திலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகவும் தெரிவிக்கின்றன.

​நடனமாடுங்கள் :

தினமும் வெறும் 30 நிமிடம் உடற்பயிற்சி மிக முக்கியம்.ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம், கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பில் 39 சதவீதத்தை எரிக்க முடியும் என ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.

கொழுப்பு கல்லீரல் ஆராய்ச்சியாளர் இங்கிலாந்தில் நடத்தப்பெற்ற ஆய்வு ஒன்றில், மிதமான மற்றும் தீவிர உடற்பயிற்சி உடலின் உள் உறுப்புகளில் தேங்கும் கொழுப்பை சிதைக்க உதவுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

கடினமான உடற்பயிற்சி செய்வதை விட, மருத்துவர்கள் பெரும்பாலும் பெண்களுக்கு மிதமான உடற்பயிற்சிகளையும் நடனம் ஆடுதல் ஆகியவற்றையே அதிகம் பரிந்துரைக்கிறார்கள்.

நடனமாடிக் கொண்டே வீட்டு வேலை செய்வது, மாடிப்படி ஏறுவது போன்றவற்றின் மூலமாக கல்லீரலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க முடியுமாம். பிறகென்ன 40 வயதாகிவிட்டது என்றெல்லாம் கூச்சப்படாமல், உங்களுக்கு பிடித்தபடி நடனமாடிக் கொண்டே வேலை செய்யுங்கள். கல்லீரல் கொழுப்பு பிரச்சினையும் குறையும். மனமும் மகிழ்சியாக இருக்கும்.

​மஞ்சள் :

இந்திய பாரம்பரியத்தில் மஞ்சள் மிகச்சிறந்த மருந்துப் பொருளாகவும் உணவாகவும் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள்.

பொதுவாக மஞ்சளுக்கு கொலஸ்டிராலைக் கட்டுக்குள் வைக்கும் தன்மை உண்டு.

இதிலுள்ள குர்குமின் என்றும் கலவை நம்முடைய உணவின் சுவையைக் கூட்டுவதோடு மட்டுமின்றி, கல்லீரலில் கொழுப்பு படிவதைத் தடுப்பதோடு, தவறான உணவுப் பழக்கத்தால் படிந்திருக்கும் கொழுப்புகளையும் நீக்குகிறது.

கல்லீரல் திசுக்களில் கொழுப்புப் படிதலைத் தடுக்கும் என்சைம்களை உருவாக்குவதில் கல்லீரலுக்கு அதிகமாக பங்குண்டு.

கல்லீரல் கொழுப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 40 வயதைக் கடந்த பெண்களுக்கு தினமும் உணவில் அரை தேக்கரண்டி அளவுக்கு குர்குமின் கொண்ட மஞ்சளைச் சேர்த்துக் கொள்ளும் போது, வெறும் எட்டே வாரங்களில் கல்லீரலில் படிந்திருக்கும் கொழுப்பின் அளவில் 51 சதவீதம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.